பக்கம்:இலக்கிய தீபம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகை 107 பின்னர் (860-875) பாடலி புறக்கணிக்கப்பட்டது. குப்தர்களுக்குரிய முக்கியமான நகரங்களுளொன்றாகப் பாடலி இருந்தபோதிலும் தலைநகரென்ற பதவியை அது இழந்துவிட்டது. பின்னர் கி.பி.405-411 வரை இந்தியாவில் தங்கியிருந்த சீன யாத்திரிகன் பாடலி நல்ல நிலைமையி லிருந்ததாகவே கூறுகிமுன். கி.பி.640-ல் இந்தியாவிற்கு வந்த ஹ்யூன் த்ஸாங் (Hiouen Thsang) பாடலி முற்றும் அழிந்து விட்டதாகக் கூதுகிறன். இச்சரிதத்தால் அசோக சக்கரவர்த்தி காலத்திற்கும் பின்பு கிறிஸ்துவப்தத்தின் ஆரம்ப காலங்களில் பாடலி யிருந்த நிலைமையை மேலைச் செய்யுள் குறிப்பதாகக் கொள் ளலாம். கி.பி.இரண்டாம் நூற்றாண்டு குறுந்தொகைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலமெனக் கருதுதல் தவறாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/116&oldid=1481716" இலிருந்து மீள்விக்கப்பட்டது