பக்கம்:இலக்கிய தீபம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகையில் ஒரு சரித்திரக் குறிப்பு 109 என்னும் ஆங்கிலர் நகரமும் இருக்கின்றன. ஆனால், அவ் இரண்டு நதிகளின் போக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன; பாட்னாவிலிருந்து 12 மைல் தூரத்தேயுள்ள டினப்பூர் என்னும் இராணுவஸ்தலத்தின் அருகே அவை சங்கமிக்கின்றன. தற்காலத்துள்ள நகருக் குக் கீழாகப் புதையுண்டு கிடக்கிற புராதனநகரம், 9 மைல் நீளமும் 1 மைல் அகலமுமுள்ளதாய், நாற்கோணவடிவின தாய் அமைந்திருந்தது. திண்ணிய மரங்கொண்டியற்றிய மதிலால் அரண்செய்யப்பெற்று, 64 வாயில்களை யுடையதாய், 570 கோபுரங்களால் அலங்கரிக்கப்பெற்றதாய், சோணை நதியின் நீரைப் பாய்ச்சி நிரப்பிய ஆழ்ந்தகன்ற அகழியாற் புறத்தே சூழப்பெற்றதாய் விளங்கியது.' நமது தேசசரித்திரத்திற் பெரும்புகழ் பெற்றிருந்த இப் பாடலி நகரின் அமைப்பிடம்பற்றிய செய்தியொன்று சங்க காலத்துப் பேரிலக்கியங்களுள் ஒன்றாகிய குறுந்தொகையின் கண்ணே புதை யுண்டு கிடக்கின்றது.இவ் அரிய இலக்கியம் முதன் முதலாக, வேலூர் வூர்ஹீஸ் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த சௌரிப் பெருமாள் அரங்கனார் என்பவ ரால், தாமெழுதிய ஒரு புத்துரையுடன், 1915-ல் வெளியிடப் பட்டது. இவர் மூலபாடத்தைச் செப்பஞ்செய்தற்குப் பெருமுயற்சியை மேற்கொண்ட போதிலும், பல செய்யுட் கள் இன்னும் திருந்தவேண்டியனவாகவே உள்ளன. இவர் காலத்திற்குப்பின் மூன்று பதிப்புக்கள் வெளிவந்திருக் கின்றன. ஆனால் இப்பதிப்புக்களிலும் முற்கூறிய குறை பாடு நீங்கவில்லை. இலக்கியச் சுவையும் கலிச்சுவையும் மிக்குள்ள இப்பேரிலக்கியம் இதுகாறும் தக்கவண்ணம் பரிசோதனை செய்யப்பெற்று வெளிவராமலிருப்பது 'தமிழ் 1. டாக்டர் சாமிநாதையரவர்களது பதிப்பு வெளிவருதற்கு முன்பு இக்கட்டுரை எழுதப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/118&oldid=1481718" இலிருந்து மீள்விக்கப்பட்டது