பக்கம்:இலக்கிய தீபம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

படை. குறுந்தொகையில் ஒரு சரித்திரக் குறிப்பு 111 எனவே, இச்செய்யுள் தலைவி கூறியதெனல் வெளிப் தனது தலைவன் வருகையை உணர்த்திய வாயில் மிகச் சிறந்ததொரு கொடை பெறுவதாக வெனக் கூறு கின்றாள். இப்பொழுது நாம் ஆராயவேண்டுவன ஈற்றின் கணுள்ள மூன்றடிகளாம். ஏனைய அடிகளின் பொருள் தெளிவாகவே யுள்ளது. 'வெள்ளிய கோட்டையுடைய யானை அழகிய சுனையிடத் துப் படியும். (ஆகலின் பரத்தையர் தனித்தாராய்ச்சென்றாட விடாது தானும் அவ்விடத்து உறைவன் தலைமகன்). பொன் னின்மிகுநியைப் பெருமையில்லாநோய் பெறுத்பொருட்டு எவர் வாயிற் கேட்டனை? காதலர்வருகையை (உரைத் தற்கு) என்று சௌ. அரங்களுச் உரையிட்டிருக்கின்றர், .

  • வெண்கோட்டி ச ைபூஞ்சுணை படியும்' என்பதனை உள்ளுறையுவமமாகக் கொண்டு, அது பிறிதொரு பொருளைக் குறிப்பாற் பெறவைப்பதாக இவ்வுரைகாரர் கருதுகின்றார். ஆகவே, இவ்வடிக்கு இப்பொருள் ரோனதன்றெனக் தெளிவு. தாம்கொண்ட உள்ளுறைபொருளின் கண்ணும் இவ்வடியில் ஆதாரயில்லாத கருத்துக்களைக் கொண்டு புகுத்துகின்றர். 'பரத்தையர் எணித்தாராய்ச் சென்றட விடாது' என்றது அங்ஙனம் ஆதாரமின்றிப் புகுத்தியதாகும். 'பொன்மலி' என்பது 'பொன்னின் மிகுதி' எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. இதுவும் வலிந்து கொள் ளப்பட்ட பொருளேயாகும். 'மலி' என்பதனைப் பெயராகக் கொள்ளுதல் பொருத்தமின்றாம். 'பொன்மிக்க' என்று உரை கூறுதலே நேரிதாம்.

ன 'பாடிலி' என்பது 'பெருமையில்லாதோய்' எனக் கொள்ளப்படுகின்றது. பாணனைநோக்கிக் கூறுமிடத்து ஒருகால் இப்பொருள் பொருந்துவதாகலாம். ஆனால் நச்சினார்க்கினியர் இச்செய்யுள் தலைவி தோழியை நோக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/120&oldid=1481720" இலிருந்து மீள்விக்கப்பட்டது