பக்கம்:இலக்கிய தீபம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகையில் ஒரு சரித்திரக் குறிப்பு 113 பாடனிபுத்திர நகரமே உண்டு ஆரியராஜ் கருதப்பட்டதாதல் வேண்டும். இந்நகரம் பண்டைக்காலத்தில் தனது நிதியாற் புகழ்பெற்று விளங்கியமை பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ (அகம்.265) என்று வரும் அகநானூற்று அடிகளால் நன்கு உணரக் கிடக்கின்றது. பாடலியிலேயுள்ள பொன்வினைஞர் பல இடங்களிலும் விரும்பிக் கொள்ளப்பட்டன ரென்பது பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும் என்ற பெருங்கதை படியிஞர் (உஞ்சை. 08, 42) அறிய காகும். இதனால் பொன் அல்கே மிகுதியாக வுள்ளமையும் ஊ கித்தல் தகும். ஆகவே 'பொன்மலி பாடலி பெறீஇயர்' என்பதே உண்மையான பாடமாதல் வேண்டும். பொன் முதலிய நிதியங்களால் மிக்கதும், போரசர்களது தலைநகராய் விளங் கியதுமான, இந்நகரை யாரும் பெறுதற்கு விழையுமொரு பேருகக் கூறுதல் பெரிதும் ஏற்புடைத்தாகும். அங்ஙனம் பெருநகர்களைக் கூறும் வழக்குண்டென்பது முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் (பட்டினப், 228) எனவும், புனல்பொரு புதவி னுறந்தை யெய்தினும் (அகம்.237) எனவும், சேண்விளங்கு சிறப்பி னாமூ ரெய்தினும் (அகம்.159) எ னவும் வரும் அடிகளால் உணரலாம். IV 'பாடலி' யென்ற பாடமே ஆசிரியர் கருதியதாகு மென்ற முடிபு, இச்செய்யுளின் மூன்றாமடியிற் காணும் இ.தீ.8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/122&oldid=1481722" இலிருந்து மீள்விக்கப்பட்டது