உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 இலக்கிய தீபம் க பாடத்தாலும் உறுதியடைகின்றது. சில காலத்திற்கு முன்னான் குறுந்தொகையைச் சில கையெழுத்துப் பிரதிக ளோடும் ஏட்டுப் பிரதியோடும் ஒப்பிட்டுத் திருத்திக்கொள் வதில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது அண்ணாமலைச் சர்வகலாசாலையில் தமிழாராய்ச்சித் துறையிலுழைத்து வந்த ஸேது ஸம்ஸ்தான மகா வித்வான் ரா. ராகவையங்காரவர்கள் தங்களுடைய பிரதியை எனக்கு அன்புடன் உதவி யிருந்தார் கள். காலஞ்சென்ற தி. த.கனகசுந்தரம் பிள்ளையவர்களுக் சூரிய பிரதியொன்றும் எனக்குக் கிடைத்திருந்தது. இன் இரு பிரதிகளிலும் இச்செய்யுளின் மூன்றவது அடி கரை வெண்கோட் டியானை சோனை படியும் என்று காணப்பட்டது. பிறிதொரு பிரதியிற் 'சோணை படியும்' என்று"வாடம் சிறிது வேறுபட்டிருந்தது. இந்த அடியின் பொருள் வெண்மையான கொம்புகளையுடைய யானை சோணைத் துறையிலே மூழ்கித்திளைக்கின்ற' என்பதாம். எனவே, இத்தொடரும் விசேடணமாய் அமைந்து, 'பாடலி' என்னும் இடப்பெயரை விசேடிக்கின்றது. சோணைத்திக் ரயிலே பாடலி நகரம் வ இருந்ததென்பது சரித்திர ஆராய்ச்சியால் தெளியப்பட்ட உண்மையே. இது முற் கானத்திலே மிகவும் பிரசித்தியடைந்திருந்தளை பிறிதொரு சான்றாலும் அறியக்கிடக்கின்றது. பாணினீயத்தில் 'யஸ்ய சாயாம: (2,1,16) என்றொரு சூத்திரம் படிக்கப்படுகின்றது. "ஏதாவது ஒன்றை ' இதுவரை பரவியுள்ள தெனக் குறிக்க வேண்டுமிடத்து, சுட்டினாற் கொள்ளலாவதனை நபும்ஸக லிங்க துவிதீய ஏகவசனமாகக் கொண்டு அதற்கு முன் 'அநு' என்ற சொல்லைப் பெய்து கூறுக "என்பது இதன்பொருள். இதற்கு உதாரணமாக அநுசோணம் பாடலி புத்திரம்' என்பது மஹா பாஷ்யகாரராகிய பதஞ்சலியாற் காட்டப் படுகின்றது. இவ்வுதாரணத்தால் பாடலி நகரம் சோனை 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/123&oldid=1481723" இலிருந்து மீள்விக்கப்பட்டது