பக்கம்:இலக்கிய தீபம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குறுந்தொகையில் ஒரு சரித்திரக் குறிப்பு 115 நதியை அடுத்து விளங்கியது பிரசித்தமான செய்தி யென் வது தெளியலாம். எனவே, 'வெண்கோட்டியானை சோணை படியும்' என்ற பாடமே கொள்ளத் தக்கதாய் முடிகின்றது. பெரும்பான்மைப் பிரதிகளிற் 'சோனை என்பதே காணப் பட்ட போதினும், 'னை' 'ணை' என்ற எழுத்துக்கள் பிரதி செய்வோர்களால் ஒன்றற்கொன்று மாறாக எழுதிவிடப்படு மாதலாலும், சோணை' என்பதே வடமொழிப் பெயரோடு ஒத்திருப்பதாலும், தமிழ் நூல்களில் இப்பெயர் வந்துள்ள ஒரு சில இடங்களில் 'சோணை' என்றே காணப்படுமாத லாலும், 'சோணை' என்ற பாடமே கொள்ளுதற்குரியது. இக்குறுந்தொகைப் பிரதிகளிற் காணப்படும் பாடமே தொல்காப்பிய உரைகளிலும் தரப்படுகின்றது. இப்பேரிலக் கணத்திற்கு உரையிட்ட பெரியார்களுள், காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணராவர். இவர் இரண்டிடங்களில் இச்செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டி யிருக்கின்றனர். ஒன்று மேலே சுட்டிய கற்பியல் 6-ம் சூத்திரவுரை. பிறி தோரிடம் கிளவியாக்கத்தில் 18-ம் சூத்திரவுரையாகும். இவ்விரண்டாவது இடத்தில், 'சோனை' என்பது 'சேனை' யெனப் பிரதி செய்தோராற் பிழையாக எழுதப்பட்டிருக் கிறது ; மற்றைப்படி யாதொரு வேறுபாடும் இல்லை. நச்சி னார்க்கினியரும், கற்பியல் 6-ம் சூத்திர உரையில், இச் செய்யுளை உதகரித்திருக்கின்றனர். அவரது பாடமும் பிரதி களிற் காணப்படும் பாடமே யாகும். V இனி, 'பூஞ்சுனை படியும்' என்ற பாடம் எவ்வாறு வந்தது என்பதனைச் சிறிது நோக்குதல் வேண்டும். எனக் குக் கிடைத்த பிரதிகளில் ஒன்றிலேனும் இப்பாடம் காணு மாறில்லை. சென்னை அரசாங்க நூல் நிலையத்திலுள்ள கடிதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/124&oldid=1481724" இலிருந்து மீள்விக்கப்பட்டது