பக்கம்:இலக்கிய தீபம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 இலக்கிய தீபம் 4 பிரதியின்மட்டும், 'வெண்கோட்டி யானை சொபைடியும் " என்று முதலில் எழுதிப் பிறகு அதனைத் திருத்தி வெண் கோட்டி யானை பூஞ்சுனை படியும்' என்று வரையப்பட்டுளது. இவ்வாறு திருத்துவதற்குரிய காரணமும் எளிதிற் புலப்படக் கூடியதே. ஏடுகளில் 'சோனை'யென்பது 'சொனை' என்றே எழுதப்பெறும். இவ்வாது எழுதப்பெற்றது 'சோனை என்ற நதியைக் குறிப்பதாகுமென்பதை யுணரும் ஆற்றல் சாமானியமாக ஏடெழுதுவோர்பாற் காணப்படுவதில்லை. அன்றியும் அந்நதியை, 'சோனை' என்பதே தமிழிற் பெரு வழக்கு. ஆதலால் 'சுனை'யென்பதுவே 'சொனை' யென்று தவறாக எழுதப்பெற்று விட்டதெனக் கருதிச் 'சுனை' யென முதலாவது திருத்தப்பட்டது. இவ்வாறு திருத்தியவுடன் அடிநிரப்புதற்கு ஓரசை குறைந்திருப்பது புலப்பட்டிருத்தல் வேண்டும். இக் குறைபாட்டை நீக்குதற்குப் 'பூஞ்சுனை' என்று பாடங் கொள்ளப்பட்டது. இப்பிழை வரலாறு ஏடெழுதுவோரால் எவ்வகைப் பிழைகள் நேரக்கூடுமென் பதனை யொருசிறிது உணர்த்தக் கூடியதாம். தவறாகத் திருத்திய இப்பாடத்தினையே சௌ. அரங்கனார் தமது பாட மாகக் கொண்டு பொருள் கூறுதற்கண் பெரிதும் இடர்ப் படுவாராயினார். ஆகவே, "வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர்' என்பதே உண்மையான பாடமெனத் தெளியலாம். பாடலிபுத்திரம் சோணை நதிக்கரையில் நிருமிக்கப்பட் டிருந்ததென்பது சரித்திரக்காரரால் நெடுங்காலமாக அறியப் படாமலிருந்ததோர் உண்மை, இவ்வுண்மையைப் பத்திய குறிப்பொன்று குறுந்தொகையிற் காணக் கிடக்கின்றமை தமிழ் மக்களாகிய நாம் அறிந்து பெரிதும் இன்புறத்தக்கதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/125&oldid=1481725" இலிருந்து மீள்விக்கப்பட்டது