________________
எருமணம் " கூழைக் கெருமணங் கொணர்கஞ் சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே. 119 இது பகற்குறி நேர்ந்த தலைமகனுக்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது. ஊர்க்கு அருகில் பொய்கையுள்ளது; இப்பொய்கைக் குத் தூரத்திலன்றிச் சமீபத்திலேயே சிறு காட்டாறு ஓடு கிறது; அங்கே உள்ளது ஒரு பொழில். அப்பொழிலுக்கு இரை தேர்தற்பொருட்டு வரும் நாரையல்லது வேறு யாரும் வருவதில்லை. அங்கே கூந்தலுக்கு எருமணம் கொண்டுவரு வதற்காகச் செல்லுவோம். எங்கள் தலைவியாகிய பேதை அங்கே வருவாள்: இதுவே இச் செய்யுளின் பொருள். இங்கே கொண்டுள்ள 'எருமணம்' என்ற பாடம் பிரதி களில் காணப்படுவது. ஐயரவர்களும் பிரதிபேதங்கள் கொடுத்துள்ள பகுதியில் 'எருமணம்' என்ற பாடபேதத் தைக் காட்டியுள்ளார்கள் (பக். 120). நூலின்கண்ணே 'எருமண்' என அவர்கள் பாடங் கொண்டார்கள். இதற்கு,'கூந்தலிலுள்ள எண்ணெய்ப் பசை,சிக்கு முதலியன போகும் பொருட்டுக் களிமண்ணைத் தேய்த்துக்கொண்டு மகளிர் நீராடுதல் வழக்கு என்று கூறி, இக்களிமண்ணையே எருமண் என்று புலவர் வழங்கியதாக ளிசேடவுரையில் எழுதி யிருக்கின்றார்கள். தலைவியரும் தோழியரும் மயிர்ச் சிக்கு முதலியன நீக்குதற் பொருட்டுக் களிமண் கொண்டுவரப் போவார் என்று குறிப்பிடுதல் தலைவி முதலாயினார்க்குச் சிறிதும் தகுதியற்றதாம் என்பது சொல்ல வேண்டா. தங்கள் கருத்தை ஆதரிப்பனவாக இரண்டு பிரயோ கங்கள் காட்டியுள்ளார்கள். ஒன்று குறுந்தொகையிலேயே 372-ம் செய்யுளில் வருவது. அங்கே 'கூழைபெய் எக்கர்' என்று காணப்படுகிறது. கூழை என்பது கடைப்பகுதி