பக்கம்:இலக்கிய தீபம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 இலக்கிய தீபம் வரு என்ற பொருளில் வந்துள்ளது ; எக்கர் என்பது நுண்மண லாகும். இங்கே கூந்தலும் மண்ணும் என்ற பொருள்கள் பொருந்தாமை செய்யுள் நோக்கி அறிந்து கொள்ளலாம். பிறிதோரிடம் பெருங்கதையினின்றும் காட்டப்பட்டுள்ளது. அங்கே 'கூந்தனறுமண்' (பெருங். 3, 40, 28) என துள்ளது, நறுமண் என்ற தொடர் நறுமணமுள்ளதாக இயற்றப்பட்ட ஒருவகைக் கலவையே யாரும். கூந்தலைத் தேய்த்துக் கழுவுவதற்குக் கொள்ளும் களிமண் ஆகாது. எனவே, ஐயரவர்கள் கொண்டுள்ள பாடமும் பொருளும் இயையாமை காணலாம். திரு. இராமரத்த ஐயர் 'ஏர்மணம்' என்று பாடங் கொண்டு மணம் என்பதனை ஆகுபெயராக்கி, மணமுள்ள மலர்கள் என்று பொருள் கொண்டனர். கூந்தலுக்கு மலர் முடித்தல் இயற்கை என்பது ஒன்றனைமட்டும் கருதி இவ் பொருள்கொண்டனர் போறும், இது வலிந்து கொள்ளப்பட்ட ஒருபொருள் என்பது எளிதிற் புலப்படும். வாறு நான் கொண்டுள்ள பாடம் 'எருமணம்' என்பது. இதற்குச் செங்கழுநீர் என்ற பொருள் உண்டென்பது பிங்கலந்தையால் அறியலாம். அரத்த முற்பலம் செங்குவளை யெருமணம் கல்லாரமுஞ் செங்கழுநீரும் அதன் பெயர் இது மாப்பெயர்த் தொகுதியில் கண்ட சூத்திரம். அச்சுப்பதிப்பில் இச்சூத்திரம் வேறுபட்டுக் காணப்படினும், 'எருமணம்' என்ற பெயர் அதன் கண்ணும் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகவே, கூந்தலில் பெய்து முடித்தற்குச் செல்கழநீர்மார் கொண்டுவரத் தோழியருடன் தலைவி பொழிறுக்குச் செல்வதாகக் கூறிக் குறியிடம்உணர்த்தியமை தெனிலாம். இதுவே பொருத்தமாயுள்ள பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/129&oldid=1481729" இலிருந்து மீள்விக்கப்பட்டது