உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து அமரர்கண் தொல்காப்பியப் புறத்திணையியலிலே முடியும் அறுவகை யானும்' என்று தொடங்கும் 26-ம் சூத்திரத்தின் உரையிகே கச்சிஞர்க்கினியச் எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றார் எயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட் காடமர்ந் தாடிய ஆடலன் நீடிப் 5 புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவினன் நுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரலன் இரண்டுருவாய் ஈரணி பெற்ற எழிற்றகையன் நேரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி 10 மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர்கமா வலனே என்ற அழகிய செய்யுளைத் தந்து 'இது கடவுள் வாழ்த்து எனக் காட்டியிருக்கின்றர். எந்நூறுக்குரிய கடவுள் வாழ்த்தென்பது ஆராயத்தக்கது. கடவுள் வாழ்த்தெனப் பொதுப்படக் கூறுதலால், உரைகாரர்களால் எடுத்தாளப்படும் பெருந்தகுதி வாய்ந் ததும் பண்டைக்காளத்துச் சான்றேர்கள் இயற்றியது மான ஒரு நூலினைச் சார்ந்ததே இச்செய்யுள் என்பது பெறப்படும். இவ்வியல்புகள் வாய்ந்தவற்றிற் நெந்தன எட்டுத்தொகை நூன்களும் கீழ்க்கணக்கு தூன்களுமா மென்பது தெளிவு. கச்சினார்க்கினியரும் இந்நூல்களையே கருத்திற் கொண்டுள்ளாரென்பது 'இது கடவுள் வாழ்த்து' என்பதனைத் தொடர்ந்து 'தொகைகளினுங் கீழ்க் கணக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/131&oldid=1481731" இலிருந்து மீள்விக்கப்பட்டது