பக்கம்:இலக்கிய தீபம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து 128 கினும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக் குக' என்று எழுதிச் செல்லுதலான் அறியப்படும். தொகை நூல்களுள் ஒரு ரலின்கணிருந்து கடவுள் வாழ்த்தும் செய்யுளை எடுத்துக் காட்டி, அவற்றுள் அடங்கிய பிற நூல்களைக் குறித்து மேலை வாக்கியம் எழுந்ததெனக் கொள்ளுதல் பொருத்த முடைத்தாள். 'எரியெள்ளு வன்ன' என்ற செய்யுள் கீழ்க்கணக்கு ளு நூல்களைச் சார்ந்ததெனல் சாலாது; அவை பெரும்பான்மை வெண்பாவினாலும் சிறுபான்மை வெண்செந்துறையாலும் இயன்றுள்ளன வாகலின். அன்றியும் அந்நூல்களனைத்தும் நமக்கு அகப்பட்டுள்ளன; அவற்றில் மேலைச் செய்யுள் போன்றன இடம்பெறுதற்குச் சிறிறும் இயைபில்லை யென் பது அவற்றை நோக்கின மாத்திரையில் அறியக் கிடக்கின் எனவே, இச் செய்யுள் தொகை நூல்களுள் ஒன் றனைச் சார்ந்ததாதல் வேண்டுமென்பது வெளிப்படை. தொகை நூல்களுள் எதனைச் சார்ந்தது? தொகை நூல்கள் எட்டு என்பது யாவரும் அறிவர். அவை இன்னவென்பது நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ எறத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் சுற்றறிந்தா ரேத்துங் கலியே அகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை றது. . என்னும் செய்யுளால் உணரலாகும். இந்நூல்கள் அகவல், கலிப்பா,பரிபாடல் என்ற மூவகைப் பாக்களால் அமைந் தன. கணிப்பாலினாலியன்ற கவித்தொகையையும் பரி பாடலாலியன்ற பரிபாடலையும் எரியெள்ளு வன்ன என் பது சார்ந்த தன்றென்பது வெளிப்படை. அகவலால் இயன்ற ஏனை ஆறு நூல்களுள் ஒன்றனை து சார்ந்ததாகள் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/132&oldid=1481732" இலிருந்து மீள்விக்கப்பட்டது