பக்கம்:இலக்கிய தீபம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11. அதியமான் அஞ்சி அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஔவையாருக்குச் சாதல் நீங்கும்படி யாக நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரமா னுடைய உறவினன் என்றும்,மழவர் என்னும் வீரர் வகையினருக்குத் தலைவன் என்றும் சங்க நூல்களில் குறிக் கப்படுகின்றான். இவனைப் 'போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி' எனப் புறநானூறு (91) கூறும். ஆகவே, இவன் பண்டைக்காலத்து வாழ்ந்த சிறந்த போர் வீரர்களுள் ஒருவன் என்பது நன்றாகப் புலப்படும். இவனுடைய வீரச் செயல்கள் புறநானூற்றில் (87-95 ; 97-101; 103-104; 206,208, 231-232, 235, 310, 315,390) விரித்து உணர்த் தப்படுகின்றன. இவனுடைய முன்னோர்களில் ஒருவன் அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் அரும்பெறல் மரபிற் கரும்பிவண் தந்தும் (புறம்,99) புகழ் பெற்றவன், கரும்பு கொணர்ந்த செய்தி வேகுேரிடத் தும் (புறம்,392) உள்ளது. இவனது மூதாதையர்களுக்கு வரங்கொடுக்கும் பொருட்டுத் தேவர்கள் வந்து தங்கிய ஒரு சோலை இவனது ஊரில் இருந்ததெனவும் இப் புற நானூற்றுச் செய்யுளின் உரையில் காண்கின்றது. இவனைக் குறித்து "எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம், வழுகின்ற எய்தியும் அமையால் " (99) என்கிறது முற்காட்டிய செய்யுள். இதற்குப் பழைய உரைகாரர் ஏழு இலாஞ்சனையும் நாடுதலையுடைய ஒரு நாளும் நீங்காத அரச உரிமையைத் தப்பின்றாகப் பெற்றும் அமையாயாய் என்று பொருள் எழுதினர். புறநானூற்றின் பதிப்பாசிரிய ராகிய டாக்டர் சாமிநாதையர் அவர்கள், "எழுபொறி - ஏழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/134&oldid=1481734" இலிருந்து மீள்விக்கப்பட்டது