பக்கம்:இலக்கிய தீபம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 இலக்கிய தீபம் வன்; அறிவு மிக்கவன்; காலத்தின் உசிதத்தை அறிபவன்; மூவகைத் தொழிலுடையவன்; தன் கீழடக்கிய கிற்றாசர் களால் தங்கள் தலைவன் என ஏற்றுக்கொள்ளப்பட்டவன். இங்ஙனமே ஏனைய ஐவகை அரசர்களுடைய இயல்பு களும் விளங்கக் கூறப்பட்டுள்ளன. அதிராஜனது பிற இயல்புகளையும் மானஸாரத்தில் விளங்கக் காணலாம். இவன் முடி தரித்தற்கு உரியவன் ; முகடமைந்த சிம்மாசனம் இவனுக்கு உ உண்டு. கற்பக விருதைத் தோரணருமுன் இவன் உடையவன்: கவரி, வெண்கொற்றக் குடை, மாலை இம்மூன்றும் இவனது அரச சின்னங்கள்; இவனது சிம்மாசனத்திற்கு ஆறு கால்கள் உண்டு ; முத்து மாலையை அணிபவன் ; இரண்டு தலை நகரங் கள் உடையவன்; ஆறிலொன்று இறை கொள்பவன். அதிராஜறுடைய இயல்புகளுன் ஒன்றாக ஏழாசர் நாட்டுத் தலைமை குறிக்கப்பட்டமை கவனிக்கற்பாலது. இதலையே, பூவார் காவில் புனிற்றுப்புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம் என்ற அடிகள் குறிப்பனவாகக் கொள்ளலாம். இவனுக்கு மானஸாரத்திற் கூறிய கற்பகக்காவுரிமை உண்டென்பது இவ்வடிகளிலே 'பூவார் காவின்' என்பதனால் விளங்கும். உரைகாரர் கூறிய விளக்கக் குறிப்பும் இதனையே ஆதரிக் கின்ற றது. இனி, சங்க இலக்கியமாகிய புறநானூற்றில் இங்குக் காட்டிய வடநூற் கருத்து உளதெனக் கூறுதல் பொருந்துமோ எனச் சிலர் ஐயுறலாம். கி.பி. 8-ம் 1. படை திரட்டல், படை வகுத்தல், படை மேற் செல்லல் என்பன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/137&oldid=1500947" இலிருந்து மீள்விக்கப்பட்டது