பக்கம்:இலக்கிய தீபம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டும்-காலமுறையும் அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர் (227) என்ற இரண்டு சூத்திரங்களை அமைத்தனர். பத்துப் பாட்டுள் மிகச் சிறியது முல்லைப் பாட்டு ; இதன்கண் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரியது மதுரைக்காஞ்சி ; இதன்கண் 782 அடிகள் உள்ளன. இப்பாட்டுக்கள் பற்றிய விவரங்களனைத்தும் அடுத்த பக்கத்தில் தந்துள்ள பட்டிகையிற் காணலாம். இந் நூல்கள் ஒருகாலத்தன்றிப் பல்வேறு காலத்திற் பல்வேறு இடத்தினராகிய பல புலவர்களால் இயற்றப் பட்டனவாம். இதுபற்றி ஐயுறுவாரில்லை ; இது குறித்து ஆராய்வதும் வேண்டற்பால தன்று, எனவே காலம் பற்றி எம்முறையில் இவை தோன்றின என்பதை அறுதியிடுவதே இங்கு மேற்கொண்ட நோக்கம். அடுத்த பக்கத்தில் முறைப்படத் தந்துள்ள பட்டிகையி னின்றும் ஒரு சில செய்திகள் புலப்படுகின்றன. பொருக ராற்றுப்படையும் பட்டினப்பாலையும் கரிகாற்பெருவளத் தானைப் பற்றியன. பட்டினப்பாலை இயற்றிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியருமாவர். எனவே இம்மூன்று நூல்களும் சம -காலத்தனவாம். மதுரைக்காஞ்சியும் கெடுகல்வாடையும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியன. கெடுகல்வாடையை இயற்றியவர் நக்கீரர். இப்பெயருடை யார் முருகாற்றுப்படையையும் இயற்றியவராகக் கூறப் படுகிறார்; இது ஆராய்ச்சிக்குரியது. மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய் நன்னன். இவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/14&oldid=1453165" இலிருந்து மீள்விக்கப்பட்டது