பக்கம்:இலக்கிய தீபம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 இலக்கிய தீபம் அதற்குப்பின். சக்ரவர்த்தி மஹாஸேநையோடுங் கூட ......தமிஸ்ர குஹையை யடைந்து காகிணீ ரத்தத்தால் ஒருயோஜநை இடைவிட்டு இருமருங்கும் ஸூர்ய மண்டல மும் சந்த்ர மண்டலமும் எழுதி அவற்றின் ஒளிகளால் அங்குள்ள பேரிருளகற்றி குஹையினுடைய வட திசைக் கவாடமடைந்து அதனைத் திறந்து.... ம்லேச்ச கண்டம் ஜயித்தற்கு வடதிசை நோக்கிப் போயினன் பக்.119). இப் பகுதியில் நெடுங்குடை,தேர், திகிரி (சக்ரம்) அத் திகிரி திரிதரக் குறைத்த அறைவாய், அங்கே நிறு விய ஆதித்தமண்டிலம் முதலியனவெல்லாம் இருத்தல் நோக்கத்தக்கது. வித்யாதர சக்ரவர்த்திகள் என்பதற்குப் பதில் பரதசக்ரவர்த்தி குறிப்பிடப்படுகிறார். எனவே, புற நானூற்றில் வந்துள்ளது போன்ற ஒரு வரலாறு ஜைன புரரணங்களிற் காணப்படுதல்வேண்டும் என்பதற்கு ஓர் அறிகுறியாக இப்பகுதி உதவுகிறது. புறநானூற்றுக் கதைக் குரிய மூலம் இன்னதென வடமொழியிலும் பிராகிருதத் திலுமுள்ள ஜைன நூல்களை ஆராய்ந்தோரே துணியவியலும். மேற்கூறியது பொருத்தமாயின், புறநானூற்றில் இச் செய்யுளைப் பாடிய கள்ளில் ஆத்திரையனார் ஒரு ஜைனப் புலவர் என்பது பெறப்படும். வைதிக சமயத்திற் குரிய புராணவரலாற்றை உட்கொண்டு பக்ஷாந்தரமாக உரைகாரர் ஓர் விளக்கம் எழுதியிருத்தலையும் அவ்விளக்கம் செய்யுளின் சொற்கிடக்கையோடு பொருந்தா தொழிதலையும் நோக்கு மிடத்து, இச்செய்யுளின் ஆசிரியர் ஜைனர் என்பதில் ஐயுறவுகொள்ள இடமில்லை. இனி, மோரியரைக் குறிக்கும் அகச்செய்யுட்களில் 69-ம் அகப்பாட்டை எடுத்துக்கொள்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/144&oldid=1500960" இலிருந்து மீள்விக்கப்பட்டது