பக்கம்:இலக்கிய தீபம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 இலக்கிய தீபம் காலையில் அவர்க்கு மோகூர் பணிந்து ஒடுங்காததன் காரண மாக மௌரியரே நேரில்வர நேரிட்டது (Beginnings of South Inidan History p. 91) என்று மாமூலனார் கூறினா ரென்று கொள்ளுதல் மதுரைக்காஞ்சியின் கருத்தோடு முரணுவதாகும். ஐந்தாவது: குண்டுநீர்க் கூடலுக்குரியனான அகுதை என்பவனுக்குக் (புறம். 347) காப்பாளராகக் கோசர் இருந்தனரென (அகம். 113) நாம் அறிகிறோம். இது பாண்டிநாட்டிற் கோசர் சிலர் வாழ்ந்தனர் என்று உணர்த்தி, அவர் மோகூருக்கு நண்பராவர் என்பதையும் வற்புறுத்துகிறது. இதனாலும் மோரியருக்குத் துணையாக இவர் அமைந்தவரென்றல் பொருத்தமின்மை காணலாம். ஆறாவது : தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி என்ற குறுந்தொகைச் செய்யுளால் (15) கோசர் வஞ்சினங் கூறி அம்மொழியை உண்மைப்பட நிறைவேற்றினரென் பது புலனாகும். எனவே, அவரது வெற்றி அரை குறை வெற்றியன்று, முழுவெற்றியாகும். இந்நிலையில் மோகூர் அவரது பகைவனென்று கொள்ளினும், அவன் பணியாது நின்றான் என்றல் குறுந்தொகையின் கருத்துக்கு மாறு பட்டதாகும். ஏழாவது : மாமூலனாரது செய்யுளின் பொருள் ஒரு தலையாகத் துணியும்படி விளக்கமுற அமையவில்லை. வம்ப மோரியர்க்கும், கோசர், மோகூர் என்பவர்களுக்கும் எவ் வகையான தொடர்பு என்பது தெளிவாக விளங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/149&oldid=1500965" இலிருந்து மீள்விக்கப்பட்டது