பக்கம்:இலக்கிய தீபம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 இலக்கிய தீபம் கர் புல்லி என்பவனது வேங்கடமலைக்கு அப்பாலுள்ள மொழிபெயர் தேஎத்து வாழ்ந்தவர் என்பது புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத் தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎம் இறந்தன ராயினும் (295) என மாமூலனார் பாடிய ஓர் அகப்பாட்டினால் விளங்கும். எனவே, இவர்கள் வடகிழக்கில் உள்ளவர்கள். முன்விவகரித்த கோசர்கள் துளுநாட்டில் வாழ்ந்தவர்கள். (அகம்.15). எனவே, இவர்கள் வடமேற்கில் உள்ளவர்கள். மோரியர்களது படையெடுப்பில் அவர்களுக்கு வேங்கடத் துக் கருகிலிருந்த வடுகரும் துளுநாட்டிலிருந்த கோசரும் துணைபுரிந்தனர் என்று கூறல்வேண்டும். இது போன்ற தொரு செய்தி தென் - இந்திய சரித்திரத்தில் முற்காலத்தே நிகழ்ந்ததெனல் பொருத்தமாகுமா? அகம் 281-ல் வரும் 'வடுகர் முன்னுற என்பதன் பொருள் ஐயமின்றி வரையறுக்கக்கூடியதாகுமா என்று நோக்குவோம். முன்னுற என்பதற்கு (1) எதிர்ப்பட (2) அணுக (3) பொருந்த (4) பின்பற்ற (5) படர்ந்துசெல்ல என்பன முதலிய பலபொருள்கள் கொள்ளுதல்கூடும். தூசிப் படையாக முன்செல்ல என்ற பொருள் வெளிப் படையான சொற்களால் கூறப்படாவிடின் அப்பொருள் கொள்ளத் தக்கதன்று. மேற்காட்டிய பொருள்களுள் எப்பொருள் இம் மாமூலனாரால் கருதப்பட்டதென ஒருவராலும் துணிய முடியாது. மோரியர் வரவை வடுகர் தடுத்து எதிர்பட்ட னர் என்றும் பொருள் கொள்ளலாம். வடுகருக்கும் மோரி யருக்கும் யாதொரு தொடர்புமின்றியே பொருள் கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/151&oldid=1500969" இலிருந்து மீள்விக்கப்பட்டது