பக்கம்:இலக்கிய தீபம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மெளரியர் தென் - இந்தியப் படையெடுப்பு 143 தலும் கூடும். வடுகரை எதிர்ப்படச் சென்றனன் என வினைவயிற் சென்ற தலைவனைக் குறித்ததாகக் கூறல் பிற பொருள்களோடு ஒத்த தகுதிவாய்ந்ததே.எனவே, இது வும் உண்மைச் சரித்திர நிகழ்ச்சியைக் குறிக்கும் சான்றாக ஏற்றுக் கொள்ளுதற் குரியதன்று. முடிவாக, மோரியரைப்பற்றி வந்துள்ள செய்யுட்கள் நான்கனுள் ஒன்று பழையவுரையுள்ள புறப்பாட்டு ; இதன் கண் பண்டைக் காலத்தோர் நம்பிவந்ததோர் கதை தெளி வரகக் கூறப்பட்டுள்ளது. பரங்கொற்றனார் செய்யுளும் மாமூலனார் செய்யுள் ஒன்றும் (அகம் - 281) சரித்திர நிகழ்ச்சியைக் குறிப்பனவாகக் கொள்ளத்தக்கனவல்ல ; புறநானூற்றுச் செய்யுட்பொருளையே உட்கொண்டதெனக் கொள்ளுதல் வேண்டும். இவற்றுள் வந்துள்ள சரித்திர வகுப்பினராகிய வடுகர் கோசர் என்பவர்களுக்கும் மோரி யரது வரவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இம் மூன்று செய்யுட்களிலும் குறிப்பிட்டுள்ள சக்கரத்திற்கும் தேருக்கும் யாதோர் இயைபும் இல்லை. அவை ஆஞ்ஞா சக்கரமென்றே கொள்ளத்தக்கன. இங்ஙனமன்றி, அகம் 251-ம் செய்யுளில் தேரின்சக்கரம் தெளிவாகக் கூறப் பட்டிருத்தலோடு கோசர், மோகூர், மோரியர் இவர் தம் முள் சரித்திரத்தொடர்பும் உளதுபோலத் தோன்றுகிறது. ஆனால், பொருள் விளக்கமில்லாதபடி பலவாறான ஐயுறவுக் கேதுவாக இச்செய்யுள் அமைந்துள்ளது. இதனை அடிப் படையாகக் கொண்டு உண்மைச் சரித்திரம் அமைத்தல் பொருந்தாது. மௌரியர் மைசூருக்குத் தெற்கே படையெடுத்தனர் என்பது ஆராய்ச்சியாளரிற் பெரும்பாலோர் ஒப்புக் கொண்ட விஷயமன்று. சந்திரகுப்த மௌரியன் ஜைனத் துறவியாகித் தென்னாடுவந்து மைசூரிலுள்ள சிரவண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/152&oldid=1500970" இலிருந்து மீள்விக்கப்பட்டது