பக்கம்:இலக்கிய தீபம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 இலக்கிய தீபம் 8-10 துள்ளார்கள். காவிரிப் பேராறு கடலிலே புகுகின்ற இடத் திற்குப் புகாஅர் என்று பெயர். இவ்விரண்டு பெயர்கள் மட்டும்தான் சங்க இலக்கியத்திற் பயின்று வருவன. நூற்றாண்டின் இறுதியிலே காகந்தி என்ற பெயரொன்றும் இதற்கு உளதாயிற்று. இப் பெயர் வரலாற்றைக் குறித்து மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் நோன்றல் தகாதுஒளி நீயெனக் கன்னி யேவலிற் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினை இ காவற் கணிகை தனக்காம் காதலன் இகந்தோர் காயினும் எஞ்சுத வில்லோன் கசுந்த னாமெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பா வின்மையிற் பரசு ராமன் நின் பால்வந் தணுகான் அமர முனிவன் அகத்தியன் தனாது துயர் நீங்கு கிளவியின் யான்தோன் றளவும் ககந்தன் காத்தலின் காகந்தி யென்றே இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு என மணிமேகலை (22, 25-38} விளக்குகின்றது. ககந்தன் என்பவனால் காக்கப்பட்டமையால் காகந்தி எனத் தத்திதப் பெயர் வழங்கிற்கும். இவார் தர்தையாகிய காத்த மன்ன வனைக் குறித்தேனும், இக் ககந்தனைக் குறித்தேனும், இவ் வரலாறு குறித்தேனும் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தும் வாராமையால் இது பிற்பட்டெழுந்த ஒரு பௌராணிக வரலாறு என்பது தெளிவு. சிலப்பதிகாரம் இயற்றிய இளங் கோவடிகட்குப்போறும் இக்கதை தெரிந்கின்ன தெனக்குச் சான்று இல்லை. ஆனால் கி.பி. 12-ம் நூற்றாண்டளவில் தோன்றிய திவாகரத்தில், இப்பெயர் புகுந்து விட்டது. காகத்தி புகார் காவிரிப்பூம் பட்டினம் என்பது திவாகரம் (5,111).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/155&oldid=1500973" இலிருந்து மீள்விக்கப்பட்டது