148
இலக்கிய தீபம்
பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
எனக் கலிங்கத்துப் பரணியிலும் (581),
பொன்னிப் புகார்முத்தி னம்மனையும் தென்னாகை
நன்னித் திலத்தின் நகைக்கழங்கும்
என விக்கிரம சோழனுலாவிலும் (118),
பொன்னி நாட்டுவமை வைப்பைப்
புலங்கொள நோக்கிப் போனார்
எனக் கம்ப-ராமாயணத்திலும் வருதல் காணலாம். இப்
பெயரும் சங்க இலக்கியங்களிற் காணப்படாத தொன்றாம்.
நாவுக்கரசர் (6,62, 6)
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவிலுறை தேவே வானோர்
அரையாஉன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய்கேனே
என அருளிச் செய்துள்ளார். இவர் காலமாகிய கி.பி. 7-ம்
நூற்றாண்டுக்கு முன் இப் பெயர் வழங்கியதற்குச் சான்
றில்லை. இப் பெயர்,
மலைத்தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
(பட்டினப்.6-7)
என்ற காரணத்தால் பிறந்தது போலும்.
இப் பெயர் எந்தக் காலத்ததா யிருப்பினும், உண்மை
யான காரணம்பற்றி எழுந்ததென்பதில் ஐயமில்லை. காவிரி
பரந்தோடிய பிரதேச முழுவதும் செல்வமும் அழகும் நிரம்பி
இன்பத்தின் விளைநிலனாய் அமைந்து விட்டது. இது முற்
காட்டிய பரணர் முதலினோரது செய்யுட்களால் விளங்கும்.
இன்பத் துறையிலே மக்கள் வழுவி விடாமற் பாதுகாத்
தற்குத் தெய்வமொன்றும் நின்று எச்சரித்து விளங்குவ
பக்கம்:இலக்கிய தீபம்.pdf/157
Appearance
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை