பக்கம்:இலக்கிய தீபம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கிய தீபம் எனவே, கபிலரது குறிஞ்சிப்பாட்டுக் கரிகாலனது காலத் நிலே தோன்றியதெனக் கொள்ளலாம். இங்ஙனம் கொள்ள இயைவு இருந்தலாம் பொருநராற்றுப்படை முதலிய மூன்ற னோடு குறிஞ்சிப்பாட்டும் சமகாலத்ததாகும். புறம் 53-ல் வானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை 'கபிலன், இன்றுளனாயின் நன்றுமன் ' எனக் கூறுகிறான். இவ் இரும் பொறை தயாளங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி யன் காலத்தவன் (புறம்,17). நெடுஞ்செழியனுக்குரிய மதுரைக்காஞ்சி கபிலது குறிஞ்சிப் பாட்டுக்குப் பிற்பட்டது என்பது இதனாலும் வற்புறுத்தப்படுகிறது. . முல்லைப்பாட்டின் காலமுறையைத் தெரிதற்கு மேற் குறித்தன போன்ற சான்றுகள் இல்லை. அளுர் முங்கைப் பாட்டு என்ற பெயர், குறிஞ்சிப்பாட்டு என்பதனைப் போன்து அமைக்கப்பட்டுள்ளது. இப்பெயரமைப்பு முல் லைப் பாட்டுப் பிற்பட்டதென்பதனை யுணர்த்துகின்றது. அன்றியும் அதன்கண் சில அரிய செய்திகள் கூறப்பட் டுள்ளன. மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற் றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞாண் எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள் உடம்பி னுரைக்கு முரையா நாவிற் படம்புகு மிலேச்ச ருழையராக என்பது முல்லைப்பாட்டுப்பகுதி. (60-66) இங்கே யவனரது கைத் தொழிற் சிறப்பு ஒன்றும், மிலேச்சரது செய்தியொன்றும் உணர்த்தப்படுகின்றன. நெடுநல் வாடையிலும் யவனரது பிறிதொரு கைத்தொழித் சிறப்பும் மிலேச்சாது பிறிதொரு செய்தியும் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/17&oldid=1481496" இலிருந்து மீள்விக்கப்பட்டது