உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பத்துப்பாட்டும் - காலமுறையும் 12 ஒளவையார், வன்பரணர் முதலியவர்கள் வள்ளல்களின் சமகாலத்தவராய் வாழ்ந்து அவர்களைப் பாடியிருக்கின்றார் கள். இவர்கள் காலத்திற்குப் பின்பு தோன்றிய தெனல் வேண்டும் இச்சிறுபாணாற்றுப்படையை. இங்ஙனமே கூர்ந்து ஆராயின், பத்துப்பாட்டினுள் ஏனை ஒன்பது ஆசிரியர்களுக்குப்பின் நத்தத்தனார் வாழ்ந்து சிறு பாணாற் றுப்படையை இயற்றினர் என்பதே துணிவாகும். மேற்குறித்த காரணங்களாற் பத்துப்பாட்டுக்களும் கீழ்க் காட்டியபடி காலம்பற்றி மூன்று தொகுதிகளாக அமைகின்றன. I.1 பொருநராற்றுப்படை II. 5 மலைபடுகடாம் 2 பெரும்பாணாற்றுப்படை 3 பட்டின்ப்பாலை 4 குறிஞ்சிப்பாட்டு 6 மதுரைக்காஞ்சி 7 நெடுநல்வாடை 8 முருகாற்றுப்படை III. 9 முல்லைப்பாட்டு 10 சிறுபாணாற்றுப்படை இத்தொகுதிகளுள் இரண்டாவதனைச் சார்ந்த தெடு நல்வாடையின் ஆசிரியர் நக்கீரர். இவர் முதற்றொகுதியில் இரண்டாவதன் பாட்டுடைத் தலைவனான கரிகால்வளவனை அகம் 141-ல், செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால் வெல்போர்ச் சோழன் இடையாற் றன்ன நல்லிசை வெறுக்கை எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இருவரும் சமகாலத்தினர் என்று கொள்வதற்குரிய சான்று யாதும் இச்செய்யுட் பகுதியிற் காணப்படவில்லை. ஆதலால் நக்கீரர் கரிகால் வளவனுக்குப் பிற்பட்டவர் என்று கொள்ளுதல் தகும். இவராற் பாடப்பட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் கரிகாற்பெருவளத்தானுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/20&oldid=1481498" இலிருந்து மீள்விக்கப்பட்டது