பக்கம்:இலக்கிய தீபம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 இலக்கிய தீபம் பிற்பட்ட காலத்தவன் என்ற முடிவு பெறப்படுகிறது. இம்முடிபு வேறொரு காரணத்தாலும் உறுதியடைகிறது. கரிகாலனைப் பாடிய புலவர்களுள் ஒருவரேனும் நெடுஞ் செழியனைப் பாடவில்லை. இங்ஙனமாக, முதற்றொகுதி நூல்கள் இரண்டாந்தொகுதி நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டனவாதல் தெளிவாகின் றது. ஆனால் பின் தொகுதியில் அமைந்திருக்கும் திருமுருகாற் றுப்படையின் காலம் ஆராய்தற்குரியது என்றேன். இதனை இயற்றியவர் நக்கீரர் என்ற பெயருடையவரெனினும் நெடு நல்வாடை ஆசிரியரின் வேறாவர் என்றும், பிற்பட்ட காலத் தவர் என்றும் கருதுதற்குரிய சான்றுகள் பல உள்ளன. இவற்றை முருகாற்றுப்படை பற்றி யான் எழுதியுள்ள அடுத்த கட்டுரையில் நன்கு விளக்கியுள்ளேன். ஆதலால் திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டுள் இறுதியில் இயற்றப் பெற்றதெனக் கொள்ளல்வேண்டும். எனவே, கீழ்க்கண்டவாறு காலமுறை யொன்று பெறப்படுகின்றது. 1 பொருநராற்றுப்படை 6 மதுரைக்காஞ்சி 2 பெரும்பாணாற்றுப்படை 7 நெடுநல்வாடை 3 பட்டினப்பாலை 8 முல்லைப்பாட்டு 4 குறிஞ்சிப்பாட்டு 5 மலைபடுகடாம் 9 சிறுபாணாற்றுப்படை 10 திருமுருகாற்றுப்படை இவற்றுள், சிறுபாணாற்றுப்படை முதல் எட்டு நூல் களுக்கும் 2 அல்லது 3 தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றி யிருக்கலாம். முருகாற்றுப்படை இவற்றிற்குப் பல நூற் றாண்டுகள் பிற்பட்டு இயற்றப்பெற்றதாதல் வேண்டும். சங்க இலக்கியங்களின் வரலாற்றினை அறிந்து கொள்வ தற்கு இம்முறை பெரிதும் பயன்படவல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/21&oldid=1481499" இலிருந்து மீள்விக்கப்பட்டது