பக்கம்:இலக்கிய தீபம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 இலக்கிய தீபம் பாட்டுடைத் தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும், மீளும்வழியிற் கூத்தர் முதலியோரைக் காணுதலும், அவர் களைத் தலைவனிடம் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச் செய்த லும் பண்டைக் காலத்து உலகியற் செய்திகளே. இவ்வா றான லௌகிக நோக்கங்களின் பொருட்டே ஆற்றுப்படை கள் தோன்றியிருத்தல் வேண்டும். வேறு நோக்கங்கள் தொடக்கத்தில் இல்லை. தொல்காப்பியர் வேறு நோக்கங் கள் குறித்து இவ்வகை நூல்கள் பிறக்கக் கூடுமெனக் கருதியவரே யல்லர். இஃது அவரது சூத்திரத்தால் தெளிவா யுள்ளது. ஆற்றுப்படைகள் பெருவழக்கிலிருந்த காலத்தின் இறுதியில் வேறு நோக்கம் பற்றியும் அவை தோன்றுதல் பொருத்தமாகும் என்ற உணர்ச்சி உண்டாயிருத்தல் வேண்டும். இரவலர் வாழ்வு எவ்வகையான் நோக்கினும் இழிவானதே. அறநூற்பெரும்புலவராகிய வள்ளுவரும், ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில் (குறள், 1066) என்று கூறினர். இந்தச் சிறுபயன் பெறுதற்பொருட்டுத் தம்மையும் தமிழையும் இழிவு படுத்திக்கொள்ளுதல் பெரு மக்கள் வெறுக்கத்தக்கதாகவே இருக்கும். இதனை நக்கீரர் என்பார் உணர்ந்து ஆற்றுப்படையின் நோக்கத்தையே முழு தும் வேறு கொண்டு அவ்வகை நூல்களுக்குப் புதியதொரு கௌரவத்தைக் கொடுத்தனரென்றுதான் நாம் கொள்ள வேண்டும். இங்ஙனம் இயற்றிய புதுநூல் முருகாற்றுப் படையாகும். இப் புது நூலினைக் குறித்துப் பண்டைக்காலத்துத் தமிழறிஞர்க்குள்ளே விவாதம் நடைபெற்றது. இது நச்சி னார்க்கினியரது புறத்திணையியலுரையால் நமக்கு விளங்கு கிறது. ஒரு சிலர் புலவராற்றுப்படை யென்பதே நூற் பெயராதல் வேண்டும் என்றனர். நூலினகத்தே (அடி 284)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/23&oldid=1481501" இலிருந்து மீள்விக்கப்பட்டது