உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 15 வழிப்படுக்கப்பட்டவன் "முதுவாயிரவலன் ஆகிய புல வன் என்பது இவர் காட்டிய காரணமாதல் வேண்டும். சிறுபாணாற்றுப்படையிலும் (அடி 10), பதிற்றுப்பத்திலும் (66), புறநானூற்றிலும் (48,180) 'முதுவாயிரவல' என வருதல் நோக்கத்தக்கது. 48-ம் புறப்பாட்டு புலவ ராற்றுப்படை' யெனவே துறை குறிக்கப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் இப்பெயர் வழங்கவில்லை யென்றும், "கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யார் என்றும் கூறி மறுக் கின்றார். முருகாற்றுப்படை யென்பதற்கு " முருகன்பால் வீடுபெறுதற்குச் சமைந்தான் ஓர் இரவலனை ஆற்றுப்படுத்த தென்பது" பொருளெனவும் அவர் கூறுவர். இப்பொருளைத் தான் நாமும் கொள்ளுதல் வேண்டும். ஆனால் பிற ஆற்றுப் படைகளெல்லாம் ஆற்றுப்படுக்கப் பட்டாராற் பெயர் பெறுதலும், அந்நெறிக்கு மாருக முருகாற்றுப் படை யொன்றே பாட்டுடைத் தலைவனாற் பெயர் பெறுதலும் மனங்கொள்ளத்தக்கன. புலவராற்றுப் படையென்ற பெயரால் நூல் நுதலிய சமயப்பொருள் விளங்கமாட்டாது. போகவே, அப்பொருள் எளிதில் விளங்குமாறு பாட்டுடைத் தெய்வத்தின் பெயரொடு சார்த்தி இந்நூல் வழங்கலாயிற் றென்பதே உண்மையெனத் தோன்றுகிறது. இப் புது வழக்குப் பரவிவிட்ட காரணத்தினால் பழையதாகிய புலவ ராற்றுப்படை என்ற பெயர் வழக்கு வீழ்ந்ததாகல் வேண்டும். மேற் குறித்த விவாதமேயன்றி, தொல்காப்பியர் வகுத்த ஆற்றுப்படை யிலக்கணத்தில் முருகாற்றுப்படை அடங்காதெனவும் விவாதம் நிகழ்ந்திருத்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் தமது வழக்கப்படி சொற்களை அலைத்துப் பொருள் கொண்டு இந்நூலும் அடங்குமெனச் சாதித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/24&oldid=1481502" இலிருந்து மீள்விக்கப்பட்டது