உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 இலக்கிய தீபம் துள்ளார். 'கூத்தரும் பாணரும் பொருகரும் விறலியும் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்' எனவும், 'ஆற்றிடைக்காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம்... சொன்ன பக்கமும்' எனவும், இரண்டாகப் பிரித்துக் கூட்டிப் பின்ன தற்கு, "இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே, தான் இறைவனிடத்துப்பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்தும் பெறாதார்க்கு இன்னவிடத்தே சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச்சென்று அக்கந்தழியினைப் பெறும்படி சொன்ன பக்கமும்' என்று பொருளுரைத்தார். இது பொருளன்று என்பதனைச் சான்றுகாட்டி நிறுவவேண்டா. 'கூத்தர் முதலாயினோர் நெறியிடையே காட்சி மாறுபாடு தோன்றி சொன்ன பக்கமும்' எனச் சேர்த்தே கொள்ளுதல் வேண்டும். இளம்பூரணர் இவ்வாறே கொண்டார். காட்சி மாறுபடுதலாவது பெருவளம் பெற்று வரும் தமது காட்சியும் வறுமைப் பிணியால் வருந்தித் தள்ளாடிவரும் ஆற்றுப் படுக்கப்படுவார் காட்சியும் தம்முள் மாறுபடுதல். இதுவே செம்பொருள். எனவே முருகாற்றுப் படையைத் தொல்காப்பியச் சூத்திரம் கருதிற்றன்றெனலே தகுதி. இதனால் தொல்காப்பியருக்கு யாதோரிழுக்குமின்று. இந்நூல் தோன்றியதனைக் குறித்து ஒரு வரலாறு வழங்குகிறது. திருப்பரங்குன்றத்திற் சரவணப் பொய்கை யின் கரையில் ஓர் அரசமரம் நின்றது. அதிலுள்ள இலை நீரில் வீழ்ந்தால் மீனாகவும் நிலத்தில் வீழ்ந்தால் பறவையாகவும் மாறும். ஒருகால் ஓர் இலை பாதி கரை யிலும், பாதி நீரிலுமாக விழுந்தது. கரையில் விழுந்த பகுதி பறவையாகவும், நீரில் விழுந்தது மீனாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/25&oldid=1481503" இலிருந்து மீள்விக்கப்பட்டது