உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 17 அமைந்த விசித்திரப் பிராணியாக அந்த இலை மாறிற்று பறவைப் பகுதி ஆகாயத்திற் பறக்கவும் மீன் பகுதி நீருள் மூழ்கவும் முயன்றன. அப்போது அங்குக் கரையிற் பூசை செய்துகொண்டிருந்த நக்கீரர் ஏகாக்கிர சிந்தனையில் வழுவி இந்த அதிசயத்தைக் கண்ணுற்று இரண்டனையும் விடுவிக்க வந்தனர். சிவ பூசையில் வழுவிய காரணத்தால் ஒரு பிரம ராட்ச்சு நக்கீரரைப் பிடித்துக்கொண்டுபோய், ஒரு குகையில் அடைத்துவிட்டது. அக் குகையில் இவரைப் போல் வழுவிய 999 பேர்கள் ஏற்கெனவே அடைபட்டிருந்தனர். இவரை யும் சேர்த்து ஆயிரம் பேராகவே, அவ்வளவு பேரையும் உண்டுவிடவெண்ணி அப் பிரமராட்சசு நீராடி வருவதற்குப் போயிற்று. அப்பொழுது நக்கீரர் முருகாற்றுப் படையைப் பாட, முருகப்பிரான் அவரைக் குகையினின்றும் விடுவித்த னர். இந்நூலை ஒதுவாருக்கு வேண்டும் வரங் கொடுப்பேம் என்றும் முருகப்பிரான் அருள் செய்தனர். இவ் வரலாறு சில வேறுபாடுகளுடன் முதன் முத லாகத் திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடலிற் காணப் படுகிறது (44,23-28). 'குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர் தடிந்தாய்' என்றுவரும் வெண்பாவும் நக்கீரர் இயற்றிய தாகவே இத் திருவிளையாடல் கூறும். ஆனால் ஒரு விஷயம் இங்கே கவனிக்கத்தக்கது. இவ் வரலாற்றுக்குரிய செய்யுட் கள் சில பிரதிகளில் இல்லை. எனவே இவைகள் பிற்காலத் தொருவராற் சேர்க்கப்பெற்றனவென்று கருநுதற்கு இட முண்டு. இந்திரன் முடிமேல் வளையெறிந்த சரிதத்திற்கும் நக்கீரர் செயலுக்கும் யாதோர் இயைபுமில்லாமையும், இச் செய்யுட்களை நீக்கியவிடத்துக் கதை செவ்வனே நிகழுமாறும் ஈண்டு நோக்கத் தக்கன. அருணகிரிநாதர், 'கீரனுக்குகந்து இ. தீ. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/26&oldid=1481504" இலிருந்து மீள்விக்கப்பட்டது