உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 இலக்கிய தீபம் ...........உலக முவப்ப வென்று னருளாலளிக்குகந்த பெரி யோனே' (திருப்புகழ். சமாஜப் பதிப்பு, செய் 352) எனவும், 'மலைமுகஞ் சுமந்த புலவர்செஞ்சொற்கொண்டு வழி திறந்த செங்கை வடிவேலா' (திருப்புகழ் 1201) எனவும் கூறுதலிலே முருகாற்றுப்படையியற்றிய நக்கீரர் வரலாற்றைச் சிறிது காணலாம். திருப்புகழாசிரியர் காலம் I5-ம் நூற்றாண்டாகும். திருவாலவாயுடையார் திருருவிளை யாடற் புராணம் 13-ம் நூற்றாண்டிற்கு முன்பு இயற்றியதாகலாம் என அந்நூலைப் பதிப்பித்த டாக்டர், உ.வே.சாமிநாதையர் கருதினர். இக்கால வரையறை கொள்ளத்தக்கதன்றெனவும் 16-ம் நூற்றாண்டுக்கே அந்நூல் உரியதெனவும் ஓர் ஆராய்ச்சியாளர் முடிவுசெய்துள்ளார். இவர் கூறுவனவே ஒப்புக்கொள்ளத்தக்கன. எவ்வாறு நோக்கினும் 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங் களில் முருகாற்றுப்படை வரலாறு காணப்பெறவில்லை. எனவே, இவ்வரலாறு 13-ம் நூற்றாண்டு முதல் கர்ணபரம் பரையாய் வழங்கத்தொடங்கியதெனக் கொள்ளலாம். இதுபோன்ற வரலாறுகளால் முருகாற்றுப்படை ஒரு சமய நூலாய் முடிந்து பெருமையிற் சிறந்து விளங்கிற்று. நக்கீரரும் பொய்யடிமையில்லாத புலவர்களுள் ஒருவராய்ப் போற்றப்பட்டனர். இவரது பொய்யற்ற புலமையை விளக்குதற்கும் ஒரு வரலாறு தோன்றியது. கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீயறியும் பூவே (குறுந். 2) என்ற குறுந்தொகைச் செய்யுள்பற்றியது இவ்வரலாறு. இச்செய்யுள் இறையனார் என்ற புலவர் இயற்றியது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/27&oldid=1481505" இலிருந்து மீள்விக்கப்பட்டது