பக்கம்:இலக்கிய தீபம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 இலக்கிய தீபம் பொருள்படுமாறு அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. நக்கீரர் செயலே கூறப்படவில்லை. ஆகவே நக்கீரரை யுளப்படுத்தாத சரிதமொன்று நாவுக் கரசரது காலத்திற்கு முன்பு, கி.பி. 6-ம் நூற்றாண்டு தொடங்கி வழங்கி யிருக்கவேண்டும். அவரை யுளப்படுத்திய சரிதம் சுமார் 13-ம் நூற்றாண்டளவில் வழங்கத் தொடங்கியிருக்க லாம். இப் பிற்காலச் சரிதத்தானும் நக்கீரர் புலமைத்திறனை யும், அஞ்சா நெஞ்சுரனையும் தமிழ்மக்கள் போற்றினார்கள். சுரேச் சாபானுக்கிரக சக்தியுடையரெனவும் சம்மர் கள் கருகினர்கள். இக் கருத்திற்சியையக் கடைச்சங்கத் தைப் பற்றிய ஒரு வரலாறும் எழுந்தது. இக் காலத்திற் போலவே கடைச்சங்க காலத்தினும் தென்மொழி வட மொழிப் போபொன் நிகழ்ந்தது. இப்போர் முடிவுபெறும் வரையிற் சங்கத்தாராகிய பட்டிமண்டபத்தார் அம்மண்ட பத்தின் தெற்குவாயிலைத் திறவாது அடைத்துவிட்டனர். அவருள் தலைவராக நக்கீரனார் நின்று வாதத்தை நிகழ்த்தி வந்தனர். எதிர்க்கட்சியில் ஒருவன் 'ஆரியம் நன்று தமிழ் தீது என்று கூறினான். இஃது உலகம் பொறுக்கமாட்டாத சொல்லாதலால் உடனே மரணமாய் வீழ்ந்தனன். இறந்த வனை எழுப்பினால் உமது தமிழ்க்கட்சியை ஒப்புவோம் என்று. எதிர்க்கட்சியினர் கூற, ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்க சுவாகா உயிர்ப்பித்தனர். என்ற மந்திரச் செய்யுளைச் சொல்லி இதனிடையில் வடமொழிக் கட்சியிலுள்ள வேட்கோவனான குயக்கோடன் தமிழ்க் கட்சியினரைக் குறித்து ஆனந்தச் செய்யுள் கூறிக்கொண்டிருந்தான். அவனை நோக்கி, நக்கீரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/29&oldid=1481507" இலிருந்து மீள்விக்கப்பட்டது