உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 இலக்கிய தீபம் யும் (86), ஆனாதம் (30, 55), காட்டுமின்கள், சூட்டுமின் கள் (86), கண்டிடுவான், உண்டிடுவான், (18), மன்ன வனே (46), இருப்பன் (85) முதலிய பிற்கால உருவங்களும், அம்மான் (2), பேசு (27, 9, 79), அணுக்கர் (12), கிறி (12) முதலிய பிற்காலச் சொற்களும்,சரணம் (4), தேவாதிதேவன் (5), ஈசன் (9,38,62), தீர்த்தன், பாசுபதம், பார்த்தன் (13), பாவித்தும்,தயா (14), (14), நேசம் (17), பாதம் (18), சேமத் தான் (25), தீர்த்தம் (28), மூர்த்தி (09), கங்காளர் (20), பாலன் (33), நாதன் (34), நாமம் (38), பரமன் (49,99), பசுபதி (50),காயம் (56),தியானிப்பார் (60), பத்தர் (71,85,86), ஆதரித்த (72),பாவம் (76), பாதாளம் (88), சங்கரன் (89) பாதாரவிந்தம் (99) முதலிய வடசொற்களும், விண்ணப்பம் (75, 77), சக்கன் (88) முதலிய பாகதச்சொற்களும் வர் துள்ளன. இவ்வந்தாதியி னகத்தே கோச்செங்கட்சோழன் (32), மார்க்கண்டன் (33), உபமன்யு (81), சலந்தரன் (84) முதலியோர் வரலாறுகள் காணப்படுகின்றன. இவை யனைத்தும் சங்கநூல்களிற் காணப்படாதன ; பிற்கால நூல்களித் பெருவழக்கின. கோபப்பிரசாதத்தில் கண் ணப்பர், சண்டேசர், சாக்கியர், கோச்செங்கட்சோழர் வரலாறுகளும் கூறப்படுகின்றன. இவையும் சங்ககாலத்து நூல்களில் அறியப்படாத வரலாறுகள். அன்றியும் முற்கூறிய அந்தாதியிற் லெ செய்ட்கள் பழைய கருத்துக்களைப் பொன்னேபோற்போற்றுகின்றன. உதாரணமாக, சொல்லும் பொருளுமே தூத்திரியு நெய்யுமா நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் - சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று என்பது (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/33&oldid=1481511" இலிருந்து மீள்விக்கப்பட்டது