பக்கம்:இலக்கிய தீபம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள விருந்துநோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே என்ற அப்பர்வாக்கை நினைப்பூட்டுகிறது. 25 ... ... ... ... நஞ்சு உண்டமையால் உண்டிவ் வுலகு என்பது கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை உண்மையா னுண்டிவ் வுலகு என்ற திருக்குறளை அடியொற்றி வந்துள்ளது. (8) (குறள், 571) கூடியிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள் நாடித்தங் குற்றங்கள் நாடாதே என்பது பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்றெரிந்து கூறப் படும் தீதுண்டோ மன்னு முயிர்க்கு (91) (குறள், 186) (குறள்,190) ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பின் என்பவற்றின் பொருளை யுட்கொண்டு வந்துள்ளது. செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது கையறவும் உள் மெலிவும் யான்காட்டப்-பையவே காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம் போரேறே இத்தெருவே போது என்பது போரகத்துப் பாயுமா பாயா துபாயமா ஊரகத்து மெல்ல நடவாயோ-கூர்வேல் மதிவெங் களியானை மாறன்றன் மார்பங் கதவங் கொண் டியாமுந் தொழ (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/34&oldid=1481512" இலிருந்து மீள்விக்கப்பட்டது