பக்கம்:இலக்கிய தீபம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 இலக்கிய தீபம் எனவே நக்கீரர் நாலடி நானூறு என்பது பிழையாதல் வேண்டும். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பக் கவிராயரவர் களது வீட்டிலிருந்து கிடைத்த யாப்பருங்கலத்தின் ஏட்டுப் பிரதியில் (பக். 113) நக்கீரர் என்ற பெயர் காணப்பட வில்லை. இதுவும் மேலை முடிபை வற்புறுத்துகிறது. முருகாற்றுப்படையின் நடையை நோக்கிய அளவிலே இதன் காலம்மிக முற்பட்டதாக இருக்லவேண்டும் என்பது முதற் பார்வையில் தோன்றும். இதன் நடை சங்கச் செய்யுட்களின் நடையோடு ஒத்துள்ளது. எனினும், சில வழக்காறுகள் மயக்கத்தை உண்டுபண்ணுகின்றன. தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் மனனேர் பெழுதரு வாணிற முகனே (89-90) என்ற இடத்தில் 'முடிமார்' என்பதனை ஆறனுருபு தொக்க பெயராகக் கொண்டு, 'முடிப்பவருடைய மனத்திலே' எனப் பழைய உரையின் ஆசிரியரும், நச்சினார்க்கினியரும் பொருளெழுதினர். வேறு பொருள் கொள்ளுகளும் அமை வாது. எனவே, ஆற்றுப்படையின் ஆசிரியர்க்கும் இதுவே கருத்தாதல் வேண்டும். இப்பிரயோகம் இலக்கணத்தோடு பொருந்துவதன்றென்பது மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியு மென்ப (தொல்-வினை.10) என்றதொல்சப்பியச்சூத்திரமும் அதன் உரைகளும் சோக்கி யறியலாம். அன்றியும், இலக்கணத்திற்குப் பொருந்தாமை யோடு, சங்க இலக்கியவழக்கிற்கும் முற்றும் மாறாக வுள் 1. செப்பங்கொண்மார் (குறுந். 16), செய்வினை முடிமார் (குறுந். 309), பேண்மார் (அகம்.35), கொண்மார் (அகம். 67), உய்ம்மார் (அகம். 207), சாஅய்மார் (கலி. 80), எள்ளுமார் (கலி 81), கொண்மார் (புறம்.15), அறுமார் (புறம்.93), உண் மார் (புறம்.163), இறுமார் (புறம்.232), இடுமார் (புறம்.325)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/39&oldid=1481517" இலிருந்து மீள்விக்கப்பட்டது