________________
திருமுருகாற்றுப்படை 31 . என ளது. முருகாற்றுப் படையிலேயே பிறிதோரிடத்து (வரி-173) பெறுமுறை கொண்மார் ......... ...வந்துடன் காண வழக்கொடு பொருந்திய பிரயோகமும் காணப்படுகின்றது. இந்நூலில் வேறோரிடத்து (வரி-168)'ஒன்பதிற்றிரட்டி யுயர்கிலை பெறீஇயர்' என வருகின்றது. இங்கே 'பெறீ இயர்' என்றசொல் கவனித்தற்குரியது, இவ்வாய்பாட்டுச் சொற்கள் எச்சமாகச் சில இடங்களிலும்? (தொல். வினை. 29) வியங்கோளாகப் பல இடங்களிலும் 3 (நன்னூல், 337) வருகின்றன. வேறு பொருள்களில் இவை வந்தனவாகத் தெரியவில்லை இவ் வழக்கிற்கு பசடுகப் பெற்றவர்" என்னும் பொருளில் முருகாற்றுப்படையில் வந்துள்ளது, வேறு பொருள் கூறுதல் எலாதாகலின், இதுவும் ஆசிரியர் கருதிற்றே யாதல் வேண்டும். இவ்வாறே மற்ஜேரிடத்தப் பெறவரும் வரியின் எல்கு மதி (295) எனக் காணப்படுகின்றது. 'மதி' என்பது முன்னிலைக்குரிய அசைச்சொல் லாகும். இது யாயிக மோமதி இகுஞ்சின் னென்னும் ஆவயி னாறு முன்னிலை யசைச்சொல் (சொல். இடை. 26) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்குணைரப்படும், 4விடுமதி' (புறம் 382) 'நீத்த லோம்புமதி' (நற்றிணை,10) முதலிய பிரயோகங்கள் யான் கூறியதனைத் தெளிவிக்கும். மயிலை நாதர் தமது நன்னூலுரையில் (326) 'பாடன்மாரெமரே (புறம். 375) எனப்பெயரொடு முடிதலும் கொள்க' என்றனர். இதன் பொருளும் அமைதியும் வேறு என்பதை எளிதில் அறியலாம். 2. உணீஇயர் (அகம். 106), உடீஇயர் (அகம்.59). 3. நிலீஇயரோ (புறம். 2); செலீஇயர், நிலைஇயர் (புறம். 24); பணியியர், செலியர், இலியர் (புறம்.6); பெறீஇயர் (குறுந். 75); பெறீஇயரோ (குறுந். 83,277); இறீஇயர் (அகம். 49); படீ இயர் (அகம்.145) ; தவா அவியரோ, அறா அலி யரோ (அகம்.338); பணீஇயர் (நற்.10).