________________
32 இலக்கிய தீபம் முதலிய வழக்குக்களையும் காண்க. தன்மை, படர்க்கை களில் இகும், பின் என்ற இரண்டு சொற்களும் கருமே யன்றி ' மதி' வருதல் இல்லை. இது, அவற்றுள், இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடும் தகுநிலையுடைய என்மனார் புலவர் . C (இடை.27) என்னுஞ் சூத்திரத்தால் அறியலாகும். நச்சினார்க்கினியர் 'மதி' படர்க்கையிடத்தும் வரும் என்பதனைத் 'தகுநிலை யுடைய' (இடை. 27) என்பதனானாதன், ' அல்லச் சொல்லிற் கவையவை' (இடை. 48) என்ற சூத்திரத்தானாதல் அமைத் துக்கொள்க என்று கூறினர். இது தம் கொள்கைக்குத் தாமே யாதாரம் ஆவதன்றிப் பிறிதில்லை. நல்கு' என்ப தனை முற்றாக்கி நிறுத்து 'மதிபலவுடன் ' என்றியைத்து, வேஒெரு பொருளும் அவர் தந்துள்ளார், இது இயக்கள இலக்கிய வழக்குக்களைப் புறக்கணித்தல் கூடாதென்னுங் கருத்தால் வலிந்து பொருள் கூறுதலேயாகும்; அது கொள்ளத் தக்கதன்று. ஆசிரியாது பெரும் தகுதியை நோக்கி இப்பிரயோகங்களை 'ஆர்ஷம்' எனக் கொள்ளுதலே தங்கதாகும். அவர் கருதியதும் படர்க்கைப் பொருளேயாம். • சங்க நூல் வழக்கோடு இங்ஙனம் மாறுபடுத்தலேயன்றி, நக்கீரர் இயற்றிய மற்றைச் சங்கச் செய்யுள் வழக்கொடும் மேற்காட்டிய பிரயோகங்கள் முரணுகின்றன1. இவற்றை 1. ஒழுகுமதி' எனப் புறத்திலும் (56), ஒம்புமதி' என நற்றிணையிலும் (358) வருகின்றன. நிலைஇயர்' எனப் புறத் திலும் (56), 'தேயர்' என நற்றிணையிலும் (197) காண்கின்றன. தருமார்' (141) 'அயர்மார்' (205),நிறுமார்' (389) என அகத்திலும், 'அயர்மார்' (258) என நற்றிணையிலும், 'பெய்ம்மார்' (54), புணர்மார்' (67) என நெடுநல்வாடையிலு முள்ளன. ஈண் டெல்லாம் இச்சொற்கள் மேலை முருகாற்றுப் படை வழக்கொடு மாறுபடுகின்றன.