பக்கம்:இலக்கிய தீபம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 33 இயற்றியவர் நோக்கும்போது இவ்வாற்றுப்படையை தொகை நூல்களிற் காணப்படுபவரும், நெடுநல்வாடையின் ஆசிரியருமாகிய நக்கீரரின் வேறாவரென்பது உறுதி. இதற்கேற்ப, இருவரது உலகமும் வெவ்வேறாக உள்ளன. தொகை நூற்கவிஞருள் ஒருவராகிய நக்கீரர், சங்கப் புலவர் கள் பிறரோடொப்ப,முடியரசர்கள், குறுநில மன்னர்கள் முதலியோரது ஆதரவில் வாழ்ந்துவந்தவர். பாண்டியர்களுள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவ ரது காலத்தரசன். இவன் ஆலங்கானத்துச் செருவில், சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானைப் பொலம்பூண் எழினி நாரறி நறவின் எருமை யூரன் தேங்கம ழகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனென்று எழுவர் நல்வல மடங்க வொருபகல் முரசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக் கொன்று களம் வேட்டனன் (அகம்.36) என்ற செய்தியை நக்கீரர் அறிவுறுத்திப் புகழுகிறார். நெடுநல் வாடை என்னும் அழகிய செய்யுள் இவ்வாலங்கானத்துச் செருவையே குறித்ததென நச்சினார்க்கினியர் கூறினர். இவன் 'முதுநீர் முன்றுறை முசிறியை முற்றுகையிட்ட செய்தியொன்றும் அகநானூற்றுச் செய்யுளால் (57) விளங்குகிறது. இப் பேரரசன் பசும்பூட் பாண்டியன் (அகம். 253), பசும்பூட்செழியன் எனவும் வழங்கப்பட் டான்; இது ஒரு புறநானூற்றுச் செய்யுளால் (76) புலனா கின்றது. கடற்கரையில் இவனுக்குரிய மருங்கூர்ப் பட்டி னத்தின் அழகையும், ஆவணத்தின் சிறப்பையும் பாராட்டிக் கூறுகிறார் (அகம்.227, நற்றிணை, 258,358); இப்பட்டினம் தழும்பன் என்பவனது ஊணூருக்கு 'உம்பர்' உள்ளது 2. F. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/42&oldid=1481520" இலிருந்து மீள்விக்கப்பட்டது