உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 இலக்கிய தீபம் (அகம், 227), கொல்கர்கள் இவளுல்|தூத்தியடிக்கப் பட் டார்கள்; இவ் வெற்றியால் பல நாடுகள் இவன் வச மாயின (அகம்,253). பெருங்குளம் ஒன்றை அமைத்துத் தனது நாட்டுக் கழனிகளிற் பயிர் செழிக்கச் செய்தனன் ; இக்குளம் வாணன் என்பவனது சிறுகுடி என்னும் ஊர்க் கருகில் இருந்தது (நற்.340). மோகூர்மன்னனும் (மது ரைக்காஞ்சி, 008) செடுஞ்செழியனது வாய்மொழி கேட்ப வனுமாகிய (மதுரைக். 772) பழையன்மாறன் கூடற் போரிலே கிள்ளிவளவனை வென்று கோதைமார்பன் என் னும் சேரன் மகிழும்படி வளவனது நாடுகள் பலவற்றைக் கவர்ந்து பாண்டிய நாட்டைப் பெருகச் செய்தனன் (அகம். 346). கூடல் நகரின் நாளங்காடியிலே பலவகை நறும் பண்டங்களும் வைக்கப் பெற்றிருந்ததனாலே இனிய ஈறு மணம் கமழ்ந்துகொண்டிருந்தது (அகம் 93). இலவந் திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனும் நக்கீரர் காலத்தவனே. இவன் நெடுஞ்செழியனுக்கு எம்முறையினன் என்பது விளக்கவில்லை ; ஒருநாள் மகனாயிருப்பினும் இருக்கலாம். இந் நன்மாறனை நக்கீரர் (புறம். 56) பூவைநிலைத் துறையில், கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம் வலியொத் தீயே வாலி யோனைப் புகழொத் தீயே இகழுந ரடு நனை முருகொத் தீயே முன்னியது முடித்தலின் எனத் தெய்வங்களோடு ஒப்பிட்டு, யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து ஆங்கினி தொழுகுமதி ஓங்குவாள் மாற தன வாழ்த்துகின்றார். சோளூட்டின் உறந்தைப் பிரதேசம் இத்தனுக்கு கரியதா யிருந்தது (புதம், 395). இன்றைச்தை பிதியாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/43&oldid=1481521" இலிருந்து மீள்விக்கப்பட்டது