பக்கம்:இலக்கிய தீபம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 37 சிற்கே தாம் முயன்று பிறரையும் அவ்வழிச் செறுத்து கின்றார். 'தாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என் பதே இவரது கொள்கை. கீழ் மக்களது அநாசாரமான வழிபாட்டிலும் தெய்வங் கொள்கை கண்டு இன்புறுகிறார். யாண்டும் இறைவனுண்மையை உள்ளூர உணர்கின்றார். காடுங் காவும் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் வேண்டினர் வேண்டியாங் கெய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே (முருகு.223-249) எனப் பறை கொட்டுகிஞர். அவனது திருவிளையாடல்களைப் புராண வுலகிற் கண்டு களிக்கின்றார். இவர் முற்கூறிய சுக்கீரயின் முற்றும் வேருவர் என்பது சொல்லவும் வேண் டுமோ? தாம் வழிபடுந் தெய்வத்தோடு மக்கட் பிறப் பினனெருய ைஇச் சக்கிரர் ஒம்புக்கூஅவரா என்பதையும் தெய்வபத்தியிற் சிறந்த இப்புலவர், ' மதுவைப் பொற்கலத் தேந்தி மகளிர் ஊட்ட மகிழ்ச்சியோடு இனிது ஒழுகு வாயாக என ஓரரசனை வாழ்த்துவரா என்பதையும் சிந்தித்தல் வேண்டும். தொகைநூற் புலவராகிய நக்கீரர் சிறந்த கவித்துவம் படைத்தவர். அவரது நெடுநல்வாடை சங்கச் செய்யுட் களில் முன்னணியில் வைத்தக்குரிய தகுதிவாய்ந்தது, இவ்வரிய செய்யுளின்வரும் சில செய்திகள் இவரது காலத்தை ஒருவாறு அறுதியிடுவதற்கு உதவுகின்றன. மதுரை மாடமோங்கிய மல்லல் மூதூராக விளங்குகின்றது. அதன் தெருக்கள் ஆறுகிடர்தனபோன் அன்னன, அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/46&oldid=1481524" இலிருந்து மீள்விக்கப்பட்டது