பக்கம்:இலக்கிய தீபம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 இலக்கிய தீபம் தாரும், தொகுப்பித்தாரும் இவரென்று அவ்வத் தொகுதியின் இறுதியிற் காணப்படுகின்றது. எஞ்சியுள்ளன முற்றும் அகப்படவில்லையாதலால் அவைபற்றி இவ்விவரங் கள் அறியக்கூடவில்லை. பத்துப்பாட்டு அங்ஙனமன்று. முற்றுங் கிடைத்துவிட்டது; எனினும் இவ்விவரங்கள் காணப்படவில்லை. இதனால், தொகை நூல்களோடொப்ப அவை தொகுக்கப் பெற்ற காலத்தில் பத்துப் பாட்டுத் தொகுக்கப் பெறவில்லை யென்பது தெளிவு. 'பத்துப்பாட்டு என்ற பெயரும் இத்துணிபினையே ஆதரிக்கின்றது. தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் அமைந் துள்ளதைப்போல முருகாற்றுப்படை முதலாவது வைக்கப் பெற்றிருப்பதை நோக்கினால், அவற்றைப் பின்பற்றி இந்நூல் முற்படக் கோக்கப்பட்டதாதல் வேண்டும். பத்துப்பாட்டிற் செய்யுள் ஒவ்வொன்றையும் அதனதன் தனிப் பெயர் கொண்டே இளம்பூரணர் முதலியோர் எடுத்தாண்டுள்ளார் கள். களவியலுரையில் கடைச்சங்க வரலாறு கூறுமிடத்துப் பத்துப் பாட்டு என்பது குறிக்கப்படவில்லை. மலைபடு கடாத் தின் உரையில் (அடி-145) 'சங்கத்தார் நீக்காது கோத்தற் குக் காரணம்' என்று பொதுப்பட எழுதிச் செல்வது கோத்தார் இவரெனக் கூற இயலாமையையே புலப்படுத்து கிறது. எனவே சௌகரியங் கருதி ஒரு முறையில் எழுதிக் கோத்த நீண்ட பாடல்களைப் பிற்காலத்தார் 'பத்துப்பாட்டு என வழங்கலாயினர் என்றலே அமைவுடைத்தெனத் தோன்றுகிறது. இவ்வழக்கு கி.பி. 14-ம் நூற்றாண்டிற்கு முன்னரே நிலைத்துவிட்டதென்பது மயிலைநாதர் 'பத்துப் வாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ்விலக்கியங்க ளுள்ளும் (நன்.387, உரை) எனக் கூறுவதால் விளங்கும். பாட்டு' எனக் குறிப்பிடும் வழக்காறும் நாளடைவில் உளதாயிற் றென்பது 'பாட்டினுந் தொகையினும் வருமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/49&oldid=1481527" இலிருந்து மீள்விக்கப்பட்டது