பக்கம்:இலக்கிய தீபம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இலக்கிய தீபம் என்னும் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பத்திரிகை --களில் வெளிவந்தவை. இவற்றை ஒருசேரத் தொகுத்து இப்போது வெளியிட்டுள்ளேன். இலக்கியங்களின் இயல்பையும் வகையையும் குறித்துப் பொதுப்பட முதலாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதனைக் கருதியே 'இருவகை இலக்கியம்' என்ற கட்டுரை இந்நூலின் தொடக்கமாக வைக்கப்பட் டுள்ளது. நமது பண்டை இலக்கியங்களைப் பாட்டும் தொகையும் என் றல் மரபு, பாட்டு என்பது பத்துப் பாட்டுள் அடங்கி யவை. இவை இன்ன என்பதை முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய பாலை கடாத்தொடும் பத்து என்ற பழைய வெண்பா உணர்த்துகிறது. இங்ஙனமே, தொகுப்பு நூல்களை யாம். இத்தொகை நூல்கள் இன்ன வென்பதை நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம் புறமென்று இத்திறத்த எட்டுத் தொகை பத்துப்பாட்டில் அடங்கிய பாட்டுக்களின் கால முறையை ஆராய்வது இரண்டாவது கட்டுரை. இத் தொகுதியில், முதலாவதாக அமைந்துள்ள திருமுருகாற் றுப்படை நக்கீரர் இயற்றியது என்பர், இப் பெரும் புலவரே பத்துப்பாட்டில் எட்டாவதாக உள்ள நெடுநல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/5&oldid=1452603" இலிருந்து மீள்விக்கப்பட்டது