பக்கம்:இலக்கிய தீபம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 41 கண்டுகொள்க எனப் பேராசிரியர் (தொல். செய்.50) கூறுவதால் அறியலாகும். மேலெழுதியவற்குத் பெற்த முடிபுகள் கீழே தொருக் துக் காட்டப்பட்டுள்ளன : காலம் நூல்கள் சமயம் 1. சங்க - நக்கீரர் கி.பி.250 நெடுநல்வாடை சைவம்? தொகை நூற்செய்யுட்கள் 2. இலக்கண -நக்கீரர் கி.பி.880 அடிநூல் சமணம் { முருகாற்றுப்படை 3. நக்கீரதேவநாயனார் கி.பி.1000 ] முதலிய 11-ம் திரு முறைப்பிரபந்தங்கள் சைவம் 4. உரைகாரர்நக்கீரர் கி.பி.1200 களவியலுரை சைவம் முருகாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியர் உரையைத் தவிரப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. பண்டையுரை காரர்கள் மீது சுமத்தப்பட்ட உரைகளும் அச்சிலிருக்கின் றன. உதாரணமாக, தி. சண்முகம்பிள்ளை யவர்களால் பார்த்திப ளு மேடரவியில், சென்னை ஜீவரக்ஷாமிர்த அச்சுக் கூடத்தில் ; பரிமேலழகருரையென ஒருரை பதிப்பிக்கப் பட்டது. இதனையே மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் பத்துப் பாட்டின் 3-ம் பதிப் பில் வேறுரை 6 என அடிக்குறிப்பிற் காட்டியிருக்கின்றார் கள். பரிமேலழகர் இவ்வுரையை இயற்றவில்லை யென்னுங் கருத்தோடுதான் இதனை 'வேறுரை' என ஐயரவர்கள் குறி்த்துன்னாரென கிளைக்கிறேன். இதனைப் போன்றே உரையாசிரியருரை' என ஏட்டுப் பிரதியில் எழுதப்பெற்ற ஒருரையுளது. இதனை மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரசுரமாக யான் வெளியிட்டுள்ளேன். உரையாசிரியர் என்று சிறப் பித்துச் சொல்லப்படும் இளம்பூரணவடிகள் இவ்வுரையை "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/50&oldid=1481528" இலிருந்து மீள்விக்கப்பட்டது