இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திருமுருகாற்றுப்படை 43 என தலைக்கை கொடுத்தற்றொழிலை.... கொள்கையினாலே நச்சினார்க்கினியர் விளக்கினர். ஆனால் தலைக்கை கொடுத்தல் அல்லது முதற்கை கொடுத்தல் என்பதன் பொருள் இது காறும் விளங்கியபாடில்லை. இவ்வுரைகாரர் 'அவர்கள் (மகளிர்கள்) களவறிந்து அவர்கட்கு இருப்பிடங்கொடுத்து என்றெழுதுகின்றார். இவ்வுரை பழைய வழக்காற்றினை யுணர்ந்து எழுதியதாகத் தோன்றுகிறது; பொருளும் விளங்குகின்றது. முருகாற்றுப்படை எவ்வளவு பிற்பட்ட காலத்ததா யிருப்பினும், அது சைவ நன்மக்களுக்குப் பாராயண நூலாய் அமைந்துவிட்டது. சிறந்த ஓர் இலக்கியமாகவும் அது கொள்ளற்குரியது. அதனைப் பொருளுணர்ந்து கற்றல் தமிழ் - மக்கள் அனைவர்க்கும் கடனாம்.