உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் 45 ஞகக்கொண்டு இயற்றியது இந்நூல், பாண்டியன் கெடுஞ் செழியன் பகைப்புறஞ் சென்று மண்டமர் நசையோடு கண்படை பெறாது பாசறைக்கண்ணேயிருப்ப, அவனோடு இன்புஸ் தித்திருக்கப்பெருது அரண்களையிலே தனித்திருந்து தனது இன்னுயிர்த் தலைவனது பிரிவை நினைந்து நினைந்து நெஞ்சழிந்து வருந்திக் கொண்டிருக்குந் தலைவியை அவன் விரைவில் அடையக் கடவனென்று கொற்றவையைப் பரவு வாள் கூறியதாக அமைந்துள்ளது இப்பாட்டு. இனி, பாட்டுடைத் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ். செழியன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை யொடு பொருது அவரினச் ைெதப்படுத்தி அவற்கு உதவி யாக வந்த திதியன் முதலிய எழுவரையும் விண்ணுலகேற் றிய வீரனவன். இவன் முன்னேரென்நாம் போரின் தை நின்று புகழ் நிறுவிய சிறப்பினரென்பது முழங்கு முந்நீர் முழுவதும் வளை இப் பரந்துபட்ட வியன் ஞாலம் தாளிற்றந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய உரவோ ரும்பல் என்னும் புறநானூற்றுச் செய்யுளால் (18) நன்கு அறியக் கிடக்கின்றது. வீரனென்பது இவன் தலையாலங்கானத்தில் செருவென்ற ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை ஆலங் கானத்து அமர்கடந் தட்ட கால முன்ப என்ற அடிகள் (புறம், 23) விளக்குகின்றன. இவன் வேள் எவ்வியின் மிழலைக் கூற்றத்தையும், பழைய வேளிருடைய முத்தூற்றுக்கூற்றத்தையும் கைக் கொண்டவனென்பது, ஓம்பா ஈகை மாவே ளெவ்வி, புனலம் புதவின் மிழலையொடு கழனிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/54&oldid=1481532" இலிருந்து மீள்விக்கப்பட்டது