பக்கம்:இலக்கிய தீபம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

48 இலக்கிய தீபம் பின் அவன் மகன் நெடுஞ்செழியன் அரசாட்சி செய்தது கி.பி.250-ஐ அடுத்த காலம் என்பது தெளிவாகின்றது. இறையனா ரகப்பொருளுரை உக்கிரப் பெருவழுதியார் காலத்து நக்கீரர் இயற்றினாரென்பது அதன் முன்னுரை கூறும் செய்தி. இது பிழையாமென்பது முந்திய கட்டுரையில் காட்டியுள்ளேன். உண்மையெனக் கொண்டவிடத்தும், மேலை முடிபே பெறப்படுகின்றது. உக்கிரப்பெருவழுதி தான் முதல் நெடுஞ்செழியன் என்பது ஐயங்காரவர்களுக்கு கும் பிற சில அறிஞர்களுக்கும் கருத்தாகும். அங்ஙனமே கொண்டால், இவனது பௌத்திரனான தலையாலங் கானத் துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தும் நக்கீரர் இருந்து அவனது வென்றிச் சிறப்பைப்பற்றி நெடு நல்வாடை யியற்றினார் என்பது போதரும். இதற்கேற்ப இளஞ்சென்னியைப்பற்றி அவன் கண்ணகியார்க்குக் கோயில் சமைத்தானென்ற செய்தியன்றி வேறொன்றும் நூல் களிற் காணப்படாமையாலே இவன் சிறிது காலந்தான் உயிர் வாழ்ந்து அரசு புரிந்தான் என்று கொள்ளவேண்டும். 'பொருநனு மிளையன்' என்று புறம் 78-ல் நெடுஞ்செழியன் குறிக்கப்படுவதால், அவன் தலையாலங்கானத்துப் போர் புரிந்தபோது இளங்காளையா யிருந்தானென்று யான்மேலே சுட்டியதும் ஈண்டைக்கு அமைவுடைத்தாதல் காணப்படும். ஏனெனில், அவன் முதியனான பின்றையே போர்நிசழ்த்தினா னெனின், நக்கீரர் அத்துணைக்காலம் உயிர் வாழ்தல் அசம்பா விதமாகலான். இக்கூறியவற்றை உற்று நோக்கும்போது உக்கிரப் பெருவழுதியும் ஆண்டில் இளைஞனாகவே இறந்திருத் தல் வேண்டும், அல்லாக்கால் அவன் விருத்தனா யிருக்கும் போது நக்கீரர் இளைஞராயிருந்தாராகல் வேண்டும். இவர் சங்கப் புலவர்களுக்குள்ளெல்லாம் தலைமை பெற்றாராகலின் இவ்வாறு கொள்ளுதல் அத்துணைப் பொருத்தமுடையதன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/57&oldid=1481535" இலிருந்து மீள்விக்கப்பட்டது