________________
50 இலக்கிய தீபம் மற்றதுகின்ஞே அவ்வளவு தரம் தான் மேற்கொண்ட தொழில் மேலேயே கருத்துக்கொண்டு மனவலியுடைய ஜூகின்முன். ஆகவே, அவனது நோக்கத்தை முற்றுற முடித் தற்கு மனவெழுச்சியை பூக்குதலினாலே, இக்காலம் அவற்கு நல்லதோர் வாடைக்காலமாயிற்று. இச்செய்யுள்தானும் தலைவன் பிரிந்தமை கூறி, போர்க் களத்தே அவனை வெற்றியெய்த வைத்தலின், இது பாலையும் இதற்குப் புறனாய வாகைத்திணைபுமாயிற்று. பாலையினது இயல்பு பிரிதல்; வாகையினது இயல்பு பகைவரை வெல்லு தலும் வெல்லுதல் நிமித்தமும் ஆம். நூலிற் பொதிந்த பொருள் இனி நெடுநல்வாடை யென்னும் செய்யுளிற் பொதிந்த பொருளினைச் சுருங்க உரைக்கின்றேன். தலைவி, தலைவன் பிரிந்தமையை ஆற்றாளாய், அவன் வரும் வழிமேல் விழி வைத்துக் கழிக்கும் குளிச்கான இரவினுள் ஒன்றைப் புலவர் பெருமானாகிய நக்கீரர் வருணிக்க எடுத்துக்கொண்டார். இரவுப் பொழுதை வருணிக்க எடுத்துக்கொண்டதன் காரணம் என்னென்று சிறிது சிந்தித்தல் வேண்டும். பகற் போதில், ஈண்டெடுத்துக்கொண்ட அரசியைப் போலும் ஒரு தலைவி தோழியர் பலர் தன்னைப் புடைசூழ இருப்பாள். அரசியர்க்குக் கணவனது நினைவுண்டாகா வண்ணம் பகற் காலத்துப் பற்பல ஆடல் பாடல்கள் நிகழ்த்துவர். மேலும் பகற்பொழுது போகர் துய்த்தற்குரிய காலமுமன்து : காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய் என்பவா பவாகலின். இக் காரணங்களால் பகற்பொழுது, அத்துணை நெடியதாய்த் தோன்றுதலில்லை. இரவிலோ வேணில், மகளிருள் ஒருவர் இருவரைத்தவிர மற்றையோர்