வாடையையும் இயற்றினர் என்பர். இவ்விரு நூல்களின் ஆசிரியர்களும் வேறு வேறாக இருக்கவேண்டுமென்பது எனது துணிபு. இவர்களைப்பற்றியும் இவ் இரு நூல்களைப் பற்றியும் அமைந்தவை அடுத்த இரண்டு கட்டுரைகள். பத்துப்பாட்டின் ஈற்றயலில் வைக்கப்பட்டுள்ள பட் டினப்பாலையை அரங்கேற்றியது பற்றி ஒரு சரித்திரச் செய்தி சாசன வாயிலாகத் தெரியவருகின்றது. இதனை விளக்குவதே ஐந்தாவது கட்டுரை, இனி, தொகை நூல்களைத் தொகுத்த கால முறையைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். இதனை ஆராய்ந்து துணிவது அடுத்து வைக்கப்பட்டுள்ள கட்டுரை, தொகை நூல்களுள் இரண்டு நூல்கள் மிகப் பிற்பட்டவை என்று கருதுவதற்குச் சான்றுகள் உள்ளன. இவை கலித்தொகை யும் பரிபாடலுமாம். ஏனையவற்றில் அகத்திணை பற்றியன நான்கு ; புறத்திணை பற்றியன இரண்டு. அகத்திணை பற்றிய நூல்களுள் குறுந்தொகை மிகச் சிறந்தது. இக் குறுந்தொகையைப் பொருளாகக் கொண்டு எழுந்ததே ஏழாவது கட்டுரையாகும். இக்குறுந்தொகையில் காணும் ஒரு சரித்திரக் குறிப்பைப் பற்றியது அடுத்து வைக்கப் பட்டுள்ள கட்டுரை, இந் நூலில் வரும் ஒரு செய்யுளின் பொருள் பற்றியது ஒன்பதாவது கட்டுரை, புறத்திணைபற்றிய நூல் இரண்டனுள், பதிற்றுப் பத்து முழுவதும் சேரர்களுக்கு உரியது. இந்நூலின் கட வுள் வாழ்த்துச் செய்யுள் இதுவரை அகப்படாத தொன் மும். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகார உரையி லிருந்து தெரிந்து புலப்படுத்துவது பத்தாவது கட்டுரை, பிறிதொரு புறத்திணை நூலாகிய புறநானூற்றில் சரித்திரச் செய்திகள் பல உள்ளன. சரித்திர ஆராய்ச்சியாளருக்கு இது கிடைத்தற்கரிய கருவூலம். இந்நூலின் கண்ணிருந்து இரண்டு சரித்திரச் செய்திகளையெடுத்து 11, 12-ம் கட் டுரைகள் வியவகரிக்கின்றன.
பக்கம்:இலக்கிய தீபம்.pdf/6
Appearance