உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் 53 அவரெய்துறும் பருவரலுக்கு உள்ளுடைந்து அனுதபித்தலிய லும். அங்கே சென்று எய்துதற்கு, நகரத்திற்கு வெகு தூரத்திலுள்ள கிராமப் பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு நம்மையு முடன்கொண்டு போதுகின்றார் நக்கீரர். புலவரோடு கூட நகர்க்குள் நாம் பிரவேசித்ததும் மாலைக்கால மாகின்றது. தெருக்கள் ஆறு கிடந்ததுபோல அகன்று நெடியவாயிருக்கின்றன. அங்கே அழகிய திண் ணிய தோளினையும் தேகப் பயிற்சியால் சதைகள் ஏறப் பெற்று முறுக்குண்ட மேனியையுமுடைய மிலேச்சர்கள் கள்ளுண்ட மகிழ்ச்சியால் தலைதடுமாறி மழைத் துவலையை யும் சிறிதுங் கருதாதவராய், பகல் கழிந்து விட்டமையையும் நோக்காதவராய், துகில்களை முன்னும் பின்னும் நாலவிட்டுக் கொண்டு, தமக்கு வேண்டிய விடத்தெல்லாம் திரிவதைக் காண்கின்றோம். தெருவில் இருமருங்குமுள்ள மகளிர்கள் கார்ப் பருவத்தின் தன்மையால் இரவும் பகலும் தெரியாத வராய் மயங்கி, பின் பூந்தட்டிலே இட்டு வைத்திருக்கும் பிச்சிப்போதுகள் மெல்லென முகையவிழ்ந்து நறுமணங் கமழுகையினாலே அந்திக்காலமாயிற்றென்பதை யுணர்ந்து, இரும்பினால் செய்த தகளியில் நெய்வார்த்துத் திரியிட்டு விளக்கேற்றி, நெல்லும் மலருந் தூவிக் கைதொழுகின்றார் கள். அங்காடிகளெல்லாம் மாலைக்காலத்தே மிகச் சிறப் புடனே விளங்குகின்றன. இங்ஙனம் பொழுதறிந்து கோடற்கு வகைதெரியாத மனையுறை புறவுகள் தம் பேடு களுடனே இரைதேடற்குச் செல்லாது, ஒரே நிலையிலிருந்து கடுத்த காலானது ஆறும்படியாக இடம் மாறி மாறிப் பெயர்ந்து, கபோதகத்தலையில் இருக்கின்றன. வேனிற் காலத்தே உபயோகப்படும் தண்ணறுஞ் சாந்தமும் சிலா வட்டமும் இப்போது குளிர்ச்சி மிகுதியினால் மகளிர்க்கு வேண்டப்படாது கழிய, அவர்தங் குற்றேவலாளர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/62&oldid=1481540" இலிருந்து மீள்விக்கப்பட்டது