பக்கம்:இலக்கிய தீபம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 இலக்கிய தீபம் கொள்ளின் நிறத்தை யொத்த சாத்தம்மியிற் கஸ்தூரி முதலிய பசுங்கூட்டு அரைக்கின்றார்கள். அம்மகளிர் மாலை யணிந்து கோடலை விரும்பாதவராய்ச் சின்மலர் பெய்து முடித்தலை வேண்டி, தம் கூந்தற்கு அகில் முதலியவற்றா லுண்டாகும் நறும்புகையை ஊட்டுகின்றார்கள். கைவல் கம் மியன் அழகுபெற இயற்றிய ஆலவட்டங்கள் உறையிடம் பட்டுச் சிலம்பியினது வெள்ளிய நூல் அவைகளிலே பற்றிப் படர்ந்திருப்ப முளைக்கோலிலே தொங்குகின்றன. வேனிற் காலத்துத் துயில்கொள்ளும் மேன்மாடத்தின் அறைகளில் தென்றற்காற்று மெல்லெனத் தவழும் சாளரங்கட்கு எதிரே நின்று உலாவாது, அச்சாளரங்களை நன்கு பொருந்த அடைத்துத் தாழிட்டு,இளையோரும் முதியோரும் வாடைக் காற்றின் கொடுமைக் காற்றாது நெருப்பினை யெழுப்பிக் குளிர்காய்ந்துகொண் டிருக்கின்றார்கள். வேனிற்காலத்து ஆடற்றொழிலை விரும்பும் மகளிர், அவ் ஆடலை இப்போது துறந்து, பாடலை விரும்பி யாழினையெடுத்து, அதன் நரம்புகள் குளிர்ச்சியாலே நிலைகுலைந்திருப்பக்கண்டு தம்மார்பகத்தே தடவி வெம்மையூட்டி,பண்ணுமுறை நிறுத்துகின்றார்கள். இவ்விதமாக, காலமழை செறிந்த வாடைக்காலத்து நிகழ்வன முழுமையுங் கண்குளிரக்கண்டு சிறிது தூரம் சேறலும், அரண்மனையின் கோபுரவாயிலை யடைகின்றோம். அரசனது பெரும் பெயர்க்கு ஒப்ப மனைவகுத்தது போல அரண்மனை விளங்கியது. அதன் கோபுரம் பெரியதொரு குன்றினைக் குடைந்து வாயிலமைத்ததுபோன்ற தோற்ற முடையதாயும், வென்றெழு கொடியோடு வேழஞ்சென்று புகும்படியாக உயர்ந்த நெடுநிலை யுடையதாயும் நிற்கின் றது. உத்திரக்கற்கவியிலே நடுவே திருவும் இருபுறத்தும் இரண்டு செங்கழுநீர்ப்பூவைக் கைக்கொண்ட இரண்டு பிடி களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நிலையிலே அமைந்திருக்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/63&oldid=1481541" இலிருந்து மீள்விக்கப்பட்டது