பக்கம்:இலக்கிய தீபம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் 55 கும் கதவுகளிரண்டும் கம்மியனது வேலைப்பாட்டின் திறத் தால் புகையுமுட்புக இடைவெளியின்றி நன்றாய்ப் பொருத்தி யிருக்கின்றன. ஆனால் புலவரது பெருங்கருணைக்கும் பாத்திரராகிய நாம் அவருடன் உட்செல்லப்பெற்று அரண் மனை முற்றத்தை அடைகின்றோம். அவ்விடத்தே மணல் பரப்பியிருக்க, கவரிமாவும் அன்னமும் அதில் தாவித் திரி கின்றன.குதிரைகள் பந்தியிலேயே நிற்க நேர்ந்ததனை வெறுத்து உணவைக் குதட்டுங் குரல், வெள்ளிய நிலா முற்றத்தே மகரவாயாகப் பகுத்த வாயிலிருந்து கலங்கின மழைநீர் வந்துவிழும் ஓதை, மயில்கள் செருக்கி ஆரவாரிக்கும் இசை : இவ்வனைத்தும் செறிந்து மலையினிடத்து ஓசைபோல ஒரே ஓசையாய்க் கேட்கப்படுகின்றதேயன்றி, மற்றைக் காலங்களிற் போல வேறுபடுத்து அறியக்கூடிய ஆடல் பாடல் முதலிய இன்னோசை கேட்கப்பெறுகின்றிலம். இனி, அரண்மனையினுள்ளே பிரவேசித்ததும் நாம் காணுங் காட்சிகள் நம்மைப் பெரிதும் வசீகரிக்கின்றன. யவனர்கள் தொழில்முற்ற இயற்றிய பாவைகள் நெய்வார்க்கப்பட்ட தகளியில் விளக்கமேந்தி அழகிதாகக் கட்டுக்கள் தோறும் நிற்கின்றன. கட்டுக்களை ஒவ்வொன்றாய்க் கடந்து அரிதி னியன்ற அந்தப்புரத்தை யடைகின்றோம். அது, வரைகண் டன்ன தோற்றத்தை யுடையதாய், வரையிலே இந்திர தனுசு கிடந்தாற்போல வீழ்ந்து கிடக்கும் கொடியினதாய், கரிய திண்ணிய தூண்களையும், செம்பிலே செய்யவல்ல தொழில்கள் பலவும் அமைந்த சுவரினையுங்கொண்டு கவி னுற விளங்குகின்றது. பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின் கர்ப்பக்கிருகத்தினுள்ளே, புலவர் சிறிதும் அஞ்சாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/64&oldid=1481542" இலிருந்து மீள்விக்கப்பட்டது