உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 இலக்கிய தீபம் கம்மையிட்டுக் கொண்டு சென்று அரசரது சயனக் கிருகத்தி னுள்ளே நம்மை உய்க்கின்றார். இவ்வழகிய அறையின் கண்ணே நாற்பதிற்றியாண்டு சென்ற யானையினது தந்தத்தினை அளவுதகச் செத்தி இலைத் தொழில் இடையிடையே பெய்து அமைத்த பெரியதோர் கட்டில் காண்கின்றோம். ஒழுக மெல்லிதாய்த் திரண்ட கால்களிலே யமைத்துள்ள குடங்கள், மெல்ல அசைந்து நடக்குமியல்பினராகிய கர்ப்பிணிகளது பால்கட்டி வீங்கிய ஸ்தன்னிய பாரங்களை யொத்து விளங்குகின்றன. மூட்டு வாய் சிறிதுந் தெரியாதபடி நன்கு பொருந்தின சாளரங் களை ஆணிகொண்டு மேற்கட்டியில் தைத்துக் கட்டிலைச் சுற்றி முத்துவடம் நாற்றியிருக்கின்றது. கட்டிலின் நடு விடத்திலே புலிவடிவம் பொறித்த அழகிய நிறம் பொருந் தீய தகடு ஒன்று பரப்பியிருக்கின்றது. மெல்லிய உரோம முதலியன உள்வைத்த மெத்தை யதன்மேல் இடப்பட் டிருக்கின்றது. அன்னத்தூவிகளைப் பரப்பி, ஒள்ளிய துகி லொன்றும் அதில் விரித்திருக்கின்றது. இன்னணமமைந்த படுக்கையின் மேலே பெண்ணரசி யார் படுத்திருப்பக் காண்கின்றோம். கருத்தொருங்கிக் கண வன் மேலே நினைவு வைத்தவளாய்க் கிடத்தலின், மனோ வாவகத்தினா லன்றிச் சரீரியாய் நாம் அங்கிருந்த போதிலும் நம்மை யறியக்கூடாத நிலைமையிலிருந்தாள். முத்தாரங் களைச் சுமந்து அழகுபெற்று முன் தோன்றிய அவள் மார் விடத்தே, இன்று திருமாங்கல்ய மட்டும் தாழ்ந்து அசைந்து கிடப்பதையன்றி வேறோரணியும் அதிற் காணக்கூடவில்லை. புனைதல் செய்யாமல் அவளது அளகம் நுதற்புறத்திலே யுவறிக் கிடக்கின்றது. ஒளி மிகுந்த குழைகள் கவின் பெறக் கிடந்த அவள் காதிலே ஒரு சிறு தாளுருவி அழுந்திக் கிடக்கின்றதே யன்றி வேறொன்றுமில்லை. பொற்றொடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/65&oldid=1481543" இலிருந்து மீள்விக்கப்பட்டது