பக்கம்:இலக்கிய தீபம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நெடுநல்வாடையும் நக்கீரரும் 59 அருஞ்செயலும், கருதிய பொருள் கற்பார் மனத்திற் பதிந்துகிடந்து இன்புறுவித்தலையே வேண்டி, அதற்கேற்ப ஒவ்வொரு வரியையும் அமைத்த கூர்த்த அறிவும், சுவையறி நுட்பமும், பெரிதும் வியக்கற்பாலனவேயாம். பிற்கால நூல்களிற் பயிற்சி மிக்குள்ளானொருவன் இச்செய்யுளைக் கற்பானாயின் அவன் காணும் வேறுபாடு மிகுதியாயிருக்குமென்பதில் ஐயமில்லை. பிற்காலச் செய்யுட்களிற் பெரும்பாலன எதுகை: மோனையாதி கட்டுக்களினாற் பிணிவுறுக்கப்பட்டு, பொருள் வளமின்றி, மிகைபடக்கூறல், கூறியது கூறல் என்பவை களுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளும்படி. உள்ளன. அவை கவிதையினது உண்மை இயல்பறியாது சுவையில்லாத சொற்களை இடர்ப்படுத்துப்புணர்த்தியாக்கப்பட்டவைகளே. "சொன்னயமும் பொருணயமும் தொனிதயமும் துறுமி விளங்கா நின்ற" என்று ஆக்கியோனே எழுதின முகவுரை களிற் காணலாமன்றி, செய்யுள் நூலினுள்ளே இவைகளைக் காண்பது அரிதினுமரிது. ஓசை நயத்தில் இவ்வகைச் செய்யுட்களிற் காண்பவை யெல்லாம் எதுகையும் மோனையும் முறைப்பட வரலேயாம். இவ்வித விதிகட்கு உட்பட்டமை யால், இவை ஓசை வேறுபாடின்றி ஒரே ஓசையினையுடைய வாய்க் கற்போர் மனத்தினைச் சலிப்படையச் செய்கின்றன. சங்கச்செய்யுட்களோ வெனில், அவை, பொருள் வளத்தைப் பெரிதுங் கருதி, பொருட்கேற்பச் சொற்களை யமைத்து, சொற்களிலும் சுவையுடைய சொற்களையே பிரயோகப் படுத்தி, பொருட்பொருத்தமுற ஓசையினை அடிக்கடி வேறு படுத்து, கற்றார் மனம் களிகூர்ந்து தளிர்க்கும் வண்ணம் இயற்றப்பட்டனவாகும். நமது நெடுநல்வாடையில் மிலேச் சர்கள் கட்குடித்து வெறிகொண்டு மழையில் விரைவாக இறுமாந்த நெஞ்சினர்களாகத் திரிகின்றதனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/68&oldid=1481546" இலிருந்து மீள்விக்கப்பட்டது